Showing posts with label Lunch side dish. Show all posts
Showing posts with label Lunch side dish. Show all posts

Saturday, 11 May 2013

தஞ்சாவூர் ஸ்வீட் மாங்காய் பச்சடி ( thanjavur mango sweet pachadi)



 தஞ்சாவூர்  ஸ்வீட் மாங்காய்  பச்சடி 


           தேவையான  பொருட்கள் 

  • மாங்காய் -1(மூக்கு மாங்காய் )
  • வெல்லம் -1/2கப் ( பொடித்த பாகு வெல்லம் )
  • மஞ்சள் பொடி  -1/2 ஸ்பூன் 
  • உப்பு - கொஞ்சம் 
  • தண்ணீர் -1கப் 
  •             
  •                   

தாளிக்க  தேவையான பொருட்கள் 

  •  ஆயில் -1ஸ்பூன் 
  •  கடுகு -1/2ஸ்பூன் 
  •  பச்சை மிளகாய் -2

செய்முறை 

              மாங்காவை  தோல்  உரித்து  நறுக்கி  கொள்ளவும்.
 பின் குக்கரில்  வைத்து மஞ்சள்  பொடி சேர்த்து   4-5 விசில்  விட்டு  இறக்கவும்.பிறகு வெந்த  மாங்காயை  மசித்து  வைத்து  கொள்ளவும். பின்   கடாயை  அடுப்பில்  வைத்து   தண்ணீர்  விட்டு  கொதித்தவுடன்  வெள்ளத்தை  போடவும்
.வெள்ளம்  கரைந்தவுடன்  வடிகட்டி  கடாயை  அடுப்பில்  வைத்து  வெல்ல  கரைசலை  விட்டு  2 நிமிடங்கள்  கொதித்தவுடன்  மசித்து  வைத்துள்ள  மாங்காயை  சேர்க்கவும்

.பின் உப்பு  சிறிது சேர்த்து  நன்றாக  5 நிமிடங்கள்  கிளறி  இறக்கி  வைக்கவும். தேவையானால்  தண்ணீர்  சேர்த்து  கொள்ளவும். பிறகு  தாளிக்க  கொட்டி  பரிமாறவும்

.

பின் குறிப்பு 

இனிப்பு  அதிகம்   தேவையானால்  வெல்லம் அதிகமாக   சேர்த்து  கொள்ளவும்.

Wednesday, 3 April 2013

இஞ்சி புளி (கேரளா ஸ்பெஷல் ) (PULI INJI/ Ginger tamarind)


இஞ்சி  புளி (கேரளா ஸ்பெஷல் )




               தேவையான பொருட்கள் 

  • புளி -50கிராம் 
  • வெல்லம் -2ஸ்பூன் (பொடித்தது )
  • வரமிளகாய் பொடி -2ஸ்பூன் 
  • தண்ணீர் -2கப் 
  • உப்பு -தேவையான அளவு 

       தாளிக்க தேவையான  பொருட்கள் 

  • நல்லெண்ணெய் -2கரண்டி 
  • கடுகு -1/2ஸ்பூன் 
  • கறிவேப்பிலை -6

 அரைக்க  தேவையான  பொருட்கள் 


  • இஞ்சி -2பெரிய பீஸ் 
  • பச்சை மிளகாய் -2

  செய்முறை


     புளியை  1/2மணிநேரம்  தண்ணீரில்  ஊர  வைத்து  கொள்ளவும்

. அரைக்க  வேண்டிய  பொருட்களை  மிக்ஸ்யில்  அரைத்து  கொள்ளவும்
.புளி  நன்றாக  ஊரிய பின் அதை  கரைத்து  வடிகட்டி  கொள்ளவும்.
  கடாயில்  எண்ணெய்  விட்டு  கடுகு ,கறிவேப்பிலை  தாளித்து  கொள்ளவும்.
 பிறகு  வடிகட்டி  வைத்துள்ள  புளி  கரைசலை  விட்டு  உப்பு ,மஞ்சள் பொடி ,வெல்லம்,மிளகாய் பொடி, அரைத்த  விழுது  சேர்த்து  1/2மணிநேரம்  கொதிக்க  விடவும்
.நன்றாக  கட்டியான  பிறகு  இறக்கி  வைத்து  பரிமாறவும்.


பின்  குறிப்பு 

1.இஞ்சி  புளி - பொரிச்ச கூட்டுக்கு  தொட்டு கொள்ள  சுவையாக  இருக்கும்.
2.தேவையானால்  மாங்காய்  இஞ்சியை  பொடியாக  நறுக்கி  கடைசியில்  சேர்க்கலாம்.
3.இஞ்சி புளி -ஒரு  பாட்டிலில்  போட்டு  15 நாட்கள்  வரை  வைத்து  கொள்ளலாம். 
4.இஞ்சி  புளி -இனிப்பு ,புளிப்பு, ஊரைப்பு  ஆகிய  மூன்று  சுவைகளாக  இருக்கும்.

Tuesday, 26 March 2013

சேனை கிழங்கு காராமணி மெழுக்கு வரட்டி(Kerala Dish)


சேனை  கிழங்கு காராமணி   மெழுக்கு வரட்டி(Kerala Dish)


 தேவையான  பொருட்கள் 



  • சேனை கிழங்கு -1/2 கிலோ 
  • காராமணி -1/2கப் 
  • தேங்காய் எண்ணெய் -4ஸ்பூன் 
  • உப்பு -தேவையான அளவு 

செய்முறை 

        சேனை கிழங்கை  பொடியாக  நறுக்கி  கொள்ளவும்
.காராமணியை தண்ணீர்  விட்டு   உப்பு  சேர்த்து குக்கரில்  வேக வைத்து  கொள்ளவும்.
 கடாயில்  தண்ணீர் விட்டு  கொதித்தவுடன்  நறுக்கிய  சேனையை  போட்டு  உப்பு  சேர்த்து  வேக வைக்கவும்
.பின்  வெந்தவுடன்  வடிகட்டவும்
. அதே  கடாயில்  தேங்காய்  எண்ணெய்  விட்டு  முதலில்  சேனையை  போட்டு  4 நிமிடம்  வதக்கிய  பிறகு
 காராமணியை  சேர்த்து  மேலும்  10 நிமிடம் வதக்கி
  எடுத்து  பரிமாறவும் .


பின்  குறிப்பு 

 1. மெழுக்கு  வரட்டி  கேரளா  சைட்  டிஷ் 
2.வாழைகாயுளும்  மெழுக்கு  வரட்டி  செய்யலாம் 
   

Thursday, 21 March 2013

சௌ சௌ மிளகு கூட்டு (chow chow pepper kootu)


சௌ சௌ மிளகு கூட்டு 


   தேவையான  பொருட்கள் 

  •        சௌ சௌ -2( பெங்களூர் கத்தரிக்காய் )
  •        பாசி பருப்பு -1/2கப் 
  •         பால் -1/2கரண்டி 
  •         கறிவேப்பிலை-4
  •         உப்பு -தேவையான  அளவு 

தாளிக்க  தேவையான  பொருட்கள் 

  •    ஆயில் -1ஸ்பூன் 
  •    கடுகு -1/2ஸ்பூன் 
  •    உளுத்தம் பருப்பு -1/2ஸ்பூன் 
  •    மிளகு பொடி -1ஸ்பூன் 
  •   வரமிளகாய் -1
  •   கறிவேப்பிலை -3


செய்முறை 

   பாசிபருப்பை  குக்கரில்  தண்ணீர்  விட்டு  வேக  வைத்து  கொள்ளவும் .

   சௌ சௌவை  பொடியாக  நறுக்கி  கொள்ளவும்.
தேவையான  அளவு  தண்ணீர்,உப்பு ,மஞ்சள் பொடி ,கறிவேப்பிலை  சேர்த்து    சௌ சௌவை  வேக  வைத்து  கொள்ளவும்
. காய்  நன்றாக  வெந்த  பிறகு   வெந்த  பாசிபருப்பு 
,பால்   சேர்த்து  20 நிமிடங்கள்  கொதிக்க  விட்டு
  இறக்கி  வைத்து   கடாயில்  ஆயில்  விட்டு  தாளிக்க கொட்டி  கொத்தமல்லி தழை  சேர்த்து  பரிமாறவும் 

Wednesday, 20 March 2013

கீரை சுண்டல் (keerai sundal)


கீரை  சுண்டல் 


                   தேவையான  பொருட்கள் 


                        சிவப்பு  கீரை -1கப் (பொடியாக நறுக்கியது )
                         தண்ணீர் -1/2கப் 
                         உப்பு -தேவையான அளவு 

தாளிக்க  தேவையான  பொருட்கள் 

 கடுகு -1/2ஸ்பூன் 
 உளுத்தம் பருப்பு -3/4ஸ்பூன் 
 கறிவேப்பிலை -5

வறுத்து பொடிக்க  தேவையான  பொருட்கள் 

    பச்சரிசி -3ஸ்பூன் 
    வரமிளகாய் -2 

செய்முறை 

   கீரையை  பொடியாக  நறுக்கி  நன்றாக  கழுவி  கொள்ளவும் 

.கடாயில்  தண்ணீர்  விட்டு  கீரையை  போட்டு  15-20 நிமிடங்கள்  வேக  விடவும்..பிறகு  மற்றொரு  கடாயில்  வறுக்க  வேண்டிய  பொருட்களை  சிவக்க  வறுத்து  கொள்ளவும்
.பின்  கடாயில்  ஆயில்  விட்டு  கடுகு ,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை  தாளித்து  
வேக வைத்துள்ள  கீரையை  சேர்த்து  பொடித்து  வைத்துள்ள  பொடியையும்  சேர்த்து  நன்றாக  கிளறவும்


.10 நிமிடங்கள்  கிளறிய  பின்  இறக்கிவைத்து  பரிமாறவும். 

Tuesday, 5 March 2013

தக்காளி தொக்கு (tomato thokku recipe)


தக்காளி தொக்கு 


                           தேவையான  பொருட்கள் 

  •  தக்காளி -10
  • வர மிளகாய்  பொடி -3ஸ்பூன் 
  • மஞ்சள் பொடி -1ஸ்பூன் 
  • தனியா பொடி -1ஸ்பூன் 
  • உப்பு-தேவையான  அளவு 

தாளிக்க  தேவையான  பொருட்கள் 

  •    நல்லெண்ணெய் -200 கிராம் 
  •     கடுகு -1/2ஸ்பூன் 
  •     கறிவேப்பிலை -8


செய்முறை 

                 தக்காளியை  பொடியாக  நறுக்கி  கொள்ளவும். கடாயில்  எண்ணெய்  விட்டு  கடுகு ,கறிவேப்பிலை  தாளித்து  நறுக்கிய  தக்காளியை  போட்டு  10 நிமிடம்  வதக்கவும் 

.பின்  மிளகாய் பொடி ,மஞ்சள் பொடி ,தனியாபொடி ,உப்பு  இவை  அனைத்தும்  போட்டு  20 நிமிடங்கள்  மூடி  வைக்கவும்
.பிறகு  மூடியை  எடுத்த  பிறகு  மீதி உள்ள  எண்ணையை  விட்டு  நன்றாக  கிளறி  இறக்கி  வைத்து  பரிமாறவும் .


பின்  குறிப்பு 

  தக்காளி  தொக்கை  7 நாட்கள்  வரை  fridge  வைத்து   கொள்ளலாம் .
 இட்லி ,தோசை ,சப்பாத்தி  இவை  அனைத்துக்கும்  தொட்டு  கொள்ளலாம் .

Monday, 25 February 2013

உளுத்தம் பருப்பு துவையல் (ulutham paruppu thuvaiyal)


உளுத்தம்  பருப்பு துவையல் 


  • உளுத்தம்  பருப்பு -1/2கப் 
  • வற்றல்  மிளகாய் -5
  • தேங்காய் துருவல் -1/2கப் 
  •  புளி -2பின்ச் 
  • பெருங்காய  பொடி -1/2ஸ்பூன் 
  • ஆயில் -2ஸ்பூன் 
  • உப்பு -தேவையான  அளவு 

செய்முறை

 கடாயில்  எண்ணெய்  விட்டு   உளுத்தம்  பருப்பு ,வற்றல்மிளகாய் ,பெருங்காயம்,புளி   சேர்த்து  10 நிமிடங்கள்  வதக்கிய
  பிறகு  தேங்காய்  துருவலை  சேர்த்து  5 நிமிடம்  வதக்கவும் .
பிறகு  உப்பு  சேர்த்து  மிக்ஸ்யில்  கரகரப்பாக  அரைத்து  எடுக்கவும் . 

பூசணிக்காய் மோர் கூட்டு ( Ash gourd buttermilk gravy)


பூசணிக்காய்  மோர்  கூட்டு  (Ash gourd buttermilk gravy) 




தேவையான  பொருட்கள் 

  •  பூசணிகாய் -1/2கிலோ 
  •  கறிவேப்பிலை -6
  • கட்டியான  மோர் -1கப் 
  • Salt                     -  To taste

அரைக்க  தேவையான  பொருட்கள் 

  •  தேங்காய் துருவல் -1கப் 
  • வற்றல் மிளகாய் -5
  • சீரகம் -1/4ஸ்பூன் 
  • பச்சரிசி -1ஸ்பூன் 

தாளிக்க  தேவையான  பொருட்கள் 

  • தேங்காய்  எண்ணெய் -1ஸ்பூன் 
  • கடுகு -1/2ஸ்பூன் 
  • வெந்தயம் -1/2ஸ்பூன் 
  • கறிவேப்பிலை -3

செய்முறை 

பூசணிகாயை  நிளமாக  நறுக்கி  கொள்ளவும்
 . ஒரு  பாத்திரத்தில்  11/2 கப்  தண்ணீர்  விட்டு  உப்பு  சேர்த்து காயை  வேக  வைக்கவும் .பின் அரைக்க  கொடுத்துள்ள  பொருட்களை  அரைத்து  கொள்ளவும்
.காய்  வெந்த  பிறகு  அரைத்த  பொருட்களை  சேர்த்து  10 நிமிடம்  கொதிக்க  வைக்கவும்

 .பிறகு  கடைந்த  கட்டியான  மோரை  விட்டு

  சுற்றிலும்  நுரை  வந்தவுடன்  இறக்கி  வைத்து  தேங்காய் எண்ணெயில்  தாளித்து  கொட்டவும்.

   பின்  குறிப்பு 

     1.மோர்  கூட்டுக்கு  பருப்பு  துவையல் .தேங்காய் துவையல்  தொட்டு கொள்ள  சுவையாக  இருக்கும்.