சௌ சௌ மிளகு கூட்டு
தேவையான பொருட்கள்
- சௌ சௌ -2( பெங்களூர் கத்தரிக்காய் )
- பாசி பருப்பு -1/2கப்
- பால் -1/2கரண்டி
- கறிவேப்பிலை-4
- உப்பு -தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
- ஆயில் -1ஸ்பூன்
- கடுகு -1/2ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு -1/2ஸ்பூன்
- மிளகு பொடி -1ஸ்பூன்
- வரமிளகாய் -1
- கறிவேப்பிலை -3
செய்முறை
பாசிபருப்பை குக்கரில் தண்ணீர் விட்டு வேக வைத்து கொள்ளவும் .
சௌ சௌவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேவையான அளவு தண்ணீர்,உப்பு ,மஞ்சள் பொடி ,கறிவேப்பிலை சேர்த்து சௌ சௌவை வேக வைத்து கொள்ளவும்
. காய் நன்றாக வெந்த பிறகு வெந்த பாசிபருப்பு
,பால் சேர்த்து 20 நிமிடங்கள் கொதிக்க விட்டு
இறக்கி வைத்து கடாயில் ஆயில் விட்டு தாளிக்க கொட்டி கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்
No comments:
Post a Comment