Showing posts with label Breakfast. Show all posts
Showing posts with label Breakfast. Show all posts

Tuesday, 26 March 2013

பூரி மசால் (poori masal)


பூரி  மசால் 


           பூரிக்கு தேவையான  பொருட்கள் 

  •  கோதிமை மாவு -3கப் 
  •  சொஜ்ஜி ரவை -3ஸ்பூன் 
  •  உப்பு -தேவையான அளவு 
  • தண்ணீர் -தேவையான அளவு 
  • ஆயில் -2கப் 
 
முதலில்  கோதிமையை  ஒரு  பேசனில்  போட்டு  அதனுடன்  ரவை ,உப்பு  சேர்த்து
  தண்ணீர்  விட்டு  பிசைந்து  கொள்ளவும்.கையில்  ஒட்டாமல்  மாவை  பிசைந்து  கொள்ளவும்
.பிசைந்த  மாவை  சிறு  உருண்டைகளாக  உருட்டி சப்பாத்தி  கல்லில்  வட்டமாக   இடவும்
.கடாயில்  ஆயில்  விட்டு  ஒவ்வொன்றாக  பொரித்து  எடுக்கவும்.




மசால்  

     தேவையான  பொருட்கள் 


  •   உருளை கிழங்கு -3
  •   வெங்காயம் -2
  •   தக்காளி -2
  •   பச்சை பட்டாணி -1/4கப் 
  •   வரமிளகாய் பொடி -2ஸ்பூன் 
  •   கடுகு -1/2ஸ்பூன் 
  •   கறிவேப்பிலை -5
  •   ஆயில் -3ஸ்பூன் 
  •   மஞ்சள் பொடி -1/4ஸ்பூன் 
  •   தனியா போடி 1/2ஸ்பூன் 
  •   கொத்தமல்லி தழை -3ஸ்பூன் 

செய்முறை 

           உருளை கிழங்கை  குக்கரில்  வேக  வைத்து  மசித்து  கொள்ளவும்
.வெங்காயம் ,தக்காளியை  பொடியாக  நறுக்கி  கொள்ளவும் .
            கடாயில்  ஆயில்  விட்டு  கடுகு,கறிவேப்பிலை  தாளித்து  கொள்ளவும்
.பின்  வெங்காயத்தை  போட்டு  5 நிமிடங்கள்  வதக்கிய  பின் 
 தக்காளி ,பட்டாணி  சேர்த்து  7 நிமிடம்  வதக்கி  கொள்ளவும்
.பிறகு  மஞ்சள் பொடி ,தனியா  பொடி,வரமிளகாய் பொடி  சேர்த்து  2 நிமிடங்கள்  வதக்கிய  பிறகு
  தண்ணீர்  விட்டு  மசித்த  உருளை  கிழங்கை  சேர்த்து  8 நிமிடங்கள்  கொதிக்க  விட்டு


  இறக்கி  வைத்து  கொத்தமல்லி தழை  தூவி  பரிமாறவும் .


 

பின் குறிப்பு 

      தேவையானால்  கரம் மசாலா  பொடி,கிராம்பு  சேர்த்து  கொள்ளலாம்.
 

Sunday, 24 March 2013

ரவா சேமியா கிச்சடி ( Rava semiya Kichadi)




ரவா சேமியா   கிச்சடி 





தேவையான  பொருட்கள் 


  •  ரவை -1கப் 9வெள்ளை ரவை )
  •  சேமியா -1/4கப் 
  •  நெய் -1ஸ்பூன் 
  •  கேரட் -2(பொடியாக நறுக்கியது )
  •  பீன்ஸ் -7பொடியாக நறுக்கியது )
  •  பச்சை பட்டாணி -1/4கப் 
  • தக்காளி -1
  • இஞ்சி -1/2ஸ்பூன் (பொடியாக நறுக்கியது ) 
  • கொத்தமல்லி தழை -2ஸ்பூன் 
  •  உப்பு -தேவையான அளவு 
  •  தண்ணீர் -2/12 கப் 
 

தாளிக்க  தேவையான பொருட்கள் 

  •     ஆயில்-2ஸ்பூன் 
  •      நெய் -3ஸ்பூன் 
  •      கடுகு -1/4ஸ்பூன் 
  •       உளுத்தம் பருப்பு -1/2ஸ்பூன் 
  •       முந்திரி பருப்பு -8
  •       பச்சை மிளகாய் -3
  •       கறிவேப்பிலை -5

செய்முறை 

 கடாயில்  நெய் 1 ஸ்பூன்  விட்டு  ரவையை  போட்டு  5 நிமிடங்கள்  வறுத்து  எடுக்கவும்
 .அதே  கடாயில்  சேமியாவையும்  போட்டு  3 நிமிடங்கள்  வறுத்து  கொள்ளவும்
.இந்த  இரண்டையும்  சேர்த்து  ஒரு தட்டில்  வைக்கவும் .கடாயில் மீதமுள்ள  நெய் ,ஆயள்  விட்டு  தாளிக்க  கொடுத்துள்ள  பொருட்களை  போட்டு
  முதலில்  வெங்காயம் ,பச்சை மிளகாய் ,இஞ்சி  சேர்த்து  3 நிமிடங்கள்  வறுத்து  கொள்ளவும்
.பின்  காய்கறிகளை  ஒவ்வொன்றாக  சேர்த்து  5 நிமிடங்கள்  வறுத்து  கொள்ளவும்
.காய்கள்  நன்றாக  வதங்கிய  பின்  தண்ணீர்  விட்டு  உப்பு  சேர்த்து  கொதிக்க  விடவும்
.தண்ணீர்  கொதித்தவுடன்  வறுத்து  வைத்துள்ள  ரவை , சேமியாவை  சேர்த்து  போட்டு  கிளறி  25 நிமிடங்கள்  மூடி  வைக்கவும் 
அடுப்பை  சிறியதாக  வைத்தே  வேக  விடவும்.தேவையானால்  2 ஸ்பூன்  நெய்  சேர்த்து  கொள்ளலாம் .ரவை ,சேமியா  நன்றாக  வெந்த  பின்  இறக்கி  வைத்து  கொத்தமல்லி தழை  தூவி  பரிமாறவும் .

பின்  குறிப்பு 

      ரவை ,சேமியாவை  மிகவும்  சிவக்க  வறுக்க  வேண்டாம் 

Friday, 22 March 2013

ஆப்பம் (APPAM)



ஆப்பம் 


     தேவையான  பொருட்கள் 


  • பச்சரிசி- 2 cups
  • வெந்தயம்- 1 tsp
  • உளுத்தம் பருப்பு  1/4 cup
  • தேங்காய் பால் -½  cup
  •  வேக வைத்த சாதம்½ cup
  •  உப்பு - தேவையான அளவு 

 செய்முறை 

 அரிசி  உளுந்து ,வெந்தயம்  இவை  அனைத்தையும்  நன்றாக  கழுவி  தண்ணீரில் 3-4 மணி  நேரம்  ஊர  வைக்கவும் .பின்  வெந்த  சாதத்தை  ஊர  வைத்த  அரிசி,உப்பு ,வெந்தயம் உளுந்துடன்  சேர்த்து  மிக்ஸ்யில்  போட்டு   நைசாக  அரைத்து  எடுக்கவும்.பின்  தேங்காய் பாலை  அரைத்த  மாவுடன்  சேர்த்து  கலக்கி சுமார்  6-8 மணிநேரம்  வெளியில்  வைத்து  ஆப்ப  கடாயில்  சுட்டு  எடுக்கவும் .

Thursday, 21 March 2013

ஆலு சப்பாத்தி (aloo stuffed chapathi)


ஆலு சப்பாத்தி 




  • கோதுமை  மாவு -2கப் 
  •  உருளை கிழங்கு -4
  •  உப்பு -தேவையான அளவு 
  •  மிளகாய் பொடி -2ஸ்பூன் 
  •  தனியா பொடி  -1/2ஸ்பூன் 
  • சீரக பொடி -1/2ஸ்பூன் 
  • நெய் -தேவையான அளவு 
  •  தண்ணீர் -தேவையான அளவு 


செய்முறை 

  கோதுமை மாவை  அளவாக  தண்ணீர்  விட்டு  மிசைந்து  கொள்ளவும்
.மிசைந்த  மாவு  1/2மணி நேரம்  ஊர  விடவும்.உருளை கிழங்கை  குக்கரில்  வேகவைத்து மசித்து    கொள்ளவும்.பின்  கடாயில்  நெய்  விட்டு  மசித்த  உருளை கிழங்கை  போட்டு  அதனுடன்  மிளகாய் பொடி ,தனியா பொடி ,உப்பு  சேர்த்து  10 நிமிடங்கள்  கிளறி  இறக்கவும்
.பிறகு  பிசைந்து  வைத்த  மாவை  உருண்டைகளாக்கி  கோதுமை மாவை  தொட்டு  சப்பாத்தி  கல்லில்  சிறியதாக  சப்பாத்தி  செய்து  அதன்  மேல்  உருளை  மசாலா  கலவையை  போட்டு 


 4 புறமும்  மூடி  மாவை  தொட்டு  பெரிய  வட்டமாக  சப்பாத்திகளாக  செய்யவும் .பின்  சப்பாத்தி  கல்லில்  ஒவ்வொன்றாக  போட்டு  எடுத்து


  நெய்  தடவி  சுட  சுட  பரிமாறவும்.


பின்  குறிப்பு 

 இதற்கு  தொட்டு கொள்ள  தயிர்  சுவையாக  இருக்கும் .

Wednesday, 20 March 2013

அரிசி உப்புமா (arisi /rice upma)


அரிசி  உப்புமா 


                    தேவையான  பொருட்கள் 

  • அரிசி -2கப் (பச்சரிசி அல்லது புழுங்கல்  அரிசி )
  • துவரம் பருப்பு -2ஸ்பூன் 
  • மிளகு -1/2ஸ்பூன் 
  • சீரகம் -1/2ஸ்பூன் 
  • வரமிளகாய் -2
  • தேங்காய் -1/2கப் (துருவியது )
  • தண்ணீர் -3கப் 

 தாளிக்க  தேவையான  பொருட்கள் 

  •     கடுகு -1/2ஸ்பூன் 
  •     உளுத்தம் பருப்பு -1/2ஸ்பூன் 
  •     பெருங்கயபொடி -1/2ஸ்பூன் 
  •     ஆயில் -2ஸ்பூன் 
  •     கறிவேப்பிலை -7
  •     தேங்காய் எண்ணெய் அல்லது  நெய்  -2ஸ்பூன் 

செய்முறை 

 அரிசி ,பருப்பு ,வரமிளகாய் ,சீரகம் ,மிளகு  இவை  அனைத்தையும் தண்ணீர்  விட்டு  1/2 மணி நேரம்  ஊர  வைத்து  கொள்ளவும்.
 ஒரு  காட்டன்  துணியில்  ஊர  வைத்த  பொருட்களை  போட்டு  நன்றாக  காய  வைக்கவும்
. பிறகு  மிக்ஸ்யில்  போட்டு  பொடித்து  கொள்ளவும்
. பின்  குக்கரில்  ஆயில்  விட்டு  தாளிக்க  வேண்டியதை  தாளித்து
  தண்ணீர்  விடவும்.தண்ணீர்  நன்றாக  கொதித்த  பிறகு
  பொடித்து  வைத்துள்ள  அரிசி  பொடி ,தேங்காய் துருவல் ,உப்பு  சேர்த்து  கிளறி  

குக்கரை சிறியதாக  வைத்து   மூடி  3 விசில்  விட்டு  எடுக்கவும் .பரிமாறும்  முன்  நெய்யை  மேலாக  விட்டு  பரிமாறவும்.


Monday, 18 March 2013

சேமியா புலாவ் (semiya pulav)


சேமியா  புலாவ் 



                 தேவையான  பொருட்கள் 

  •  சேமியா -1கப் 
  •  தண்ணீர் -2கப் 
  •  பீன்ஸ் -7
  •  கேரட் -2
  • பெரிய வெங்காயம் -2
  • தக்காளி -1
  • பட்டாணி -3/4கப் 
  • தனியா பொடி -1/2ஸ்பூன் 
  • கரம் மசாலா பொடி -1/2ஸ்பூன் 
  • பச்சை மிளகாய் -2
  • முந்திரி -5
  • இஞ்சி பூண்டு விழுது -1/2ஸ்பூன் 
  • உப்பு -தேவையான அளவு 
  • ஆயில் -2ஸ்பூன் 
  • கொத்தமல்லி தழை -2ஸ்பூன் (பொடியாக  நறுக்கியது )

  செய்முறை 

  காய்கறிகளை  நீளமாக  நறுக்கி  கொள்ளவும் .


  சேமியாவை -கடாயில்  போட்டு 5நிமிடங்கள்  வறுத்து  எடுக்கவும்
 .பின்  கடாயில்  தண்ணீர்  விட்டு  கொதித்தவுடன்  சேமியாவை  போட்டு உப்பு  சேர்த்து   10 நிமிடங்கள்  வேக  விடவும்
 .வெந்த  சேமியாவை  வடிகட்டி  பச்சை தண்ணீரில்  நன்றாக  கழுவவும் 
.பிறகு  கடாயில்  ஆயில்  விட்டு  இஞ்சி பூண்டு  விழுதை  போட்டு  1நிமிடம்  வதக்கிய  பிறகு வெங்காயம் ,முந்திரி ,பச்சை மிளகாய் போட்டு  5நிமிடம்  வதக்கிய  பின்


  பீன்ஸ் ,கேரட்  சேர்த்து  மேலும் 7 நிமிடங்கள்  வதக்கி  தனியா பொடி ,கரம் மசாலா பொடி ,உப்பு  சேர்த்து  2நிமிடங்கள்  வதக்கவும்.பின்  வெந்த  சேமியாவை  சேர்த்து
  கலக்கி  கொத்தமல்லி  தழை  தூவி  பரிமாறவும்