காரடையான் நோம்பு அடை
தேவையான பொருட்கள்
- பச்சரிசி -1கப்
- பாகு வெல்லம் -1கப்
- தேங்காய் -1/2கப் பல்லாக நறுக்கியது
- காராமணி -3/4கப்
- தண்ணீர் -21/2கப்
- நெய் -4ஸ்பூன்
- வாழைஇலை -1
செய்முறை
காராமணியை குக்கரில் வைத்து வேக வைத்து கொள்ளவும்
.அரிசியை 1 மணிநேரம் ஊர வைக்கவும் .பின் ஒரு காட்டன் துணியில் போட்டு 1/2 நேரம் காய வைக்கவும்.
பின் மிக்ஸ்யில் போட்டு நன்றாக பொடித்து கொள்ளவும் அடுப்பில் கடாயை வைத்து பொடித்த அரிசி பொடியை போட்டு 20 நிமிடங்கள் வறுக்கவும்
.பிறகு தண்ணீர் விட்டு கொதித்த பின் வறுத்த அரிசி பொடியை போட்டு 2 நிமிடங்கள் பிறகு பொடித்து வைத்துள்ள வெல்லத்தையும் சேர்த்து.
வேக வைத்துள்ள காராமணி,நறுக்கிய தேங்காய் சேர்த்து நன்றாக கிளறி 20 நிமிடங்கள் மூடி வைக்கவும் .20 நிமிடங்கள் பிறகு அடுப்பை அனைத்து இறக்கி வைக்கவும் .மாவு ஆறிய பிறகு வாழை இலையில் நெய் தடவி சதுரமாக தட் டி
இட்லி தட்டில் வைத்து குக்கரில் 20-25 நிமிடங்கள் வைத்து இறக்கவும்.
பின் குறிப்பு
அரிசி பொடியை வறுக்கும் பொழுது அடுப்பை சிறியதாக வைத்து வறுக்கவும் .
No comments:
Post a Comment