Wednesday, 26 December 2012

திருவாதிரை களி (Thiruvathirai Kali ) Recipe


திருவாதிரை  களி  

தேவையான  பொருட்கள் 



         பச்சரிசி  -ஒரு  டம்ளர்
         வெல்லம்  - 1 1/2 டம்ளர்
         நெய்         -  5 ஸ்பூன்
         ஏலக்காய்  பொடி  -ஒரு  பிஞ்சு
         முந்திரி  - தேவையான அளவு
     தேங்காய் துருவல்    -  ஒரு கப்

   செய்முறை ;




                          முதலில் அரிசியை  நன்றாக  களைந்து  20 நிமிடங்கள்  ஊற  வைக்கவும். ஊறவைத்த அரிசியை  ஒரு காட்டன்  துணியில் காய  வைக்கவும் (அரிசி ஈராம் இல்லாமல்  நன்றாக  காய வேண்டும் ) அதை  ஒரு  கடாயில்  போட்டு  பொன் நிறமாகும் வரை  வறுக்கவும்  .வறுத்த  அரிசியை  மிக்ஸ் யில்  போட்டு  நைசாக  பொடிக்கவும் .மற்றொரு  கடாயை அடுப்பில் ஏற்றி  மூன்று டம்ளர் தண்ணிர் விட்டு  அதில்  வெல்லத்தை  போட்டு  வெல்லம்  நன்றாக  கரைந்த  பிறகு, அதில்  அரிசி  பொடியை  போட்டு  25  நிமிடங்கள் மூடி  வைக்கவும்,



  பிறகு களி வெந்த பின் இறக்கி வைத்து  அதில்  நெயில்  வருத்த முந்திரியையும் தேங்காயையும்  போட்டு  பின் ஏலக்காய்  பொடியை  தூவவும்சுவையான திருவாதிரை களி தயார்.

பின்  குறிப்பு
      தேங்காய்  வறுக்கும்  பொழுது அடுப்பை சின்னதாக  வைத்து  வறுக்கவும் தேங்காய் பொன்  நிறமாக வருபட  வேண்டும்.களியை  குக்கரில்  வைத்தும் வேக வைக்கலாம்
      வறுத்த அரிசிப்பொடியுடன் லேசாக வறுத்த பாசிப்பருப்பை சேர்த்தும் செய்யலாம்.      

    நேரம்  இல்லாதவர்கள் அரிசியை களைந்து உலர்த்தாமல் நேரடியாக  வறுத்தும் செய்யலாம். களிக்கு முக்கியமான ஒன்று, வெல்லம்  பாகுவெல்லம்மாக  இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment