பனாரசி ஆலூ சப்ஜி
தேவையான பொருட்கள்
- சின்ன உருளை கிழங்கு -20
- மஞ்சள் பொடி -1/2ஸ்பூன்
- கரம் மசாலா பொடி -1/2ஸ்பூன்
- மிளகாய் பொடி -1/4ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- சக்கரை -1/2ஸ்பூன்
- மில்க் கிரீம் -2ஸ்பூன் (தேவையானால் )
- கஸ்துரி மேத்தி இழை -1/2ஸ்பூன்
- நெய் -2ஸ்பூன்
- ஆயில்- 2ஸ்பூன்
அரைக்க தேவையான பொருட்கள்
- வெங்காயம் -2(பெரியது )
- முந்திரி -6
- பச்சை மிளகாய் -1
- வர மிளகாய் -2
- மிளகு -5
- சீரகம் -1/4ஸ்பூன்
- சோம்பு -1/4ஸ்பூன்
- பூண்டு -4
- இஞ்சி -ஒரு சிறிய துண்டு
செய்முறை
தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் 20 நிமிடங்கள் போட்டு மூடி வைக்கவும்.பின் தக்காளியை மிக்ஸ்யில் போட்டு அரைத்து கொள்ளவும் .
உருளை கிழங்கை குக்கரில் வேக வைத்து தோல் உரித்து கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸ்யில் அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து ஆயில் விட்டு வேக வைத்துள்ள உருலைகிழங்கை போட்டு 10 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.
பின் அதை தனியாக ஒரு தட்டில் வைக்கவும்.அதே கடாயில் நெய் விட்டு அரைத்த விழுதை போட்டு 5 நிமிடங்கள் வதக்கிய பிறகு அரைத்த தக்காளி விழுதை சேர்த்து மேலும் 15 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.
தேவையானால் தண்ணீர் 1/2 கப் சேர்த்து கொதிக்க வைக்கவும்.பிறகு மஞ்சள் பொடி,மிளகாய் பொடி,சக்கரை ,உப்பு ,கரம் மசாலா பொடி, சேர்த்து 15 நிமிடங்கள் கொதித்த பின்
வதக்கி வைத்துள்ள உருளையை சேர்த்து கஸ்துரி மேத்தி இழை சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைத்து மில்க் க்ரீமை விட்டு பரிமாறவும்.
பின் குறிப்பி
1.ஆலு க்ரேவி - புல்கா ,சப்பாத்தி ,புலாவ் இவை அனைத்துக்கும் தொட்டு கொள்ளலாம்.
No comments:
Post a Comment