Showing posts with label Rasam. Show all posts
Showing posts with label Rasam. Show all posts

Tuesday, 26 February 2013

பூண்டு ரசம் (garlic rasam)


பூண்டு  ரசம் 


           தேவையான  பொருட்கள் 

  • தக்காளி -2
  • புளி -எலும்பிச்சை  அளவு 
  • மஞ்சள் பொடி -1/2ஸ்பூன் 
  • பெருங்காய பொடி -1/2ஸ்பூன் 
  • உப்பு -தேவையான அளவு 
  • கொத்தமல்லி தழை -2ஸ்பூன் 
  • பூண்டு -8பல் 

வறுத்து  அரைக்க  தேவையான  பொருட்கள் 

  •   தனியா-1ஸ்பூன் 
  •   மிளகு -1/2ஸ்பூன் 
  •   சீரகம் -1/2ஸ்பூன் 
  •  வற்றல்  மிளகாய் -3
  •  கறிவேப்பிலை -5
  •  ஆயில்-1/2ஸ்பூன் 

தாளிக்க  தேவையான  பொருட்கள் 

நெய் -1ஸ்பூன் 
கடுகு -1/2ஸ்பூன் 

செய்முறை 

புளியை  1 கப்  தண்ணீரில்  1/2 மணி  நேரம்  ஊர வைத்து  கொள்ளவும்.

பூண்டை  தோல்  உரித்து  கொள்ளவும் 

பின்  கடாயில்  புளி  கரைசலை  கரைத்து  விட்டு  தக்காளி,மஞ்சள் பொடி ,பெருங்காயம் ,உப்பு  கறிவேப்பிலை  சேர்த்து  20 நிமிடம்  கொதிக்க  விடவும் 
.பிறகு  மற்றொரு  கடாயில்  எண்ணெய்  விட்டு  வறுக்க  கொடுத்துள்ளதை   5 நிமிடம்  வதக்கி.
 பிறகு  அடுப்பை  அணைத்து  அதில்  உரித்து  வைத்துள்ள  பூண்டு ,கறிவேப்பிலை  சேர்த்து  போட்டு  வதக்கவும்
,மிக்ஸ்யில்  வறுத்த  பொருட்களை  சிறிது  தண்ணீர்  விட்டு  கரகரப்பாக  அரைத்து  கொள்ளவும் .

அரைத்த  விழுதை  கொதித்து  கொண்டிருக்கும்  புளி  கரைசளுடன்  சேர்த்து  10 நிமிடம்  கொதித்த  பிறகு  தேவையான  அளவு  தண்ணீர்  விட்டு 
 கறிவேப்பிலை  சேர்த்து  நுரை  வந்தவுடன்  இறக்கி  வைத்து  நெயில்  கடுகு  தாளித்து  கொட்டி  கொத்தமல்லி தழை  சேர்த்து  பரிமாறவும் 


                
             

Friday, 25 January 2013

மிளகு ரசம் ( Milagu/ Pepper corn Rasam)

மிளகு  ரசம் (pepper corn rasam)




தேவையான  பொருட்கள் 
  •                   புளி --சிறிய  எலும்பிச்சை பழ அளவு 
  •                   தக்காளி - 2(பொடியாக  நறுக்கியது )
  •                   பெருங்காயம் - 1/4ஸ்பூன் 
  •                   மஞ்சள்பொடி - 1/2 ஸ்பூன் 
  •                   உப்பு - தேவையான  அளவு 
  •                   சர்க்கரை -1/4ஸ்பூன் 
  •                   கறிவேப்பிலை - 5இதழ்கள் 
  •                   கொத்தமல்லி தழை -2ஸ்பூன் 
  •                   துவரம் பருப்பு - 1/4கப் (குக்கரில்  குழைய வேகவைக்கவும் )
  •                   தண்ணீர் -2 கப் 

                     தாளிக்க தேவையான  பொருட்கள் 
  •             கடுகு 1/2ஸ்பூன் 
  •             நெய் - 1ஸ்பூன் 
  •             கறிவேப்பிலை -2இதழ்கள் 
  •             மிளகு ,சீரகம்  பொடி - 11/2ஸ்பூன்  
 செய்முறை 
               ஒரு  பாத்திரத்தில்  புளி ,தக்காளி ,உப்பு ,மஞ்சள்பொடி ,பெருங்காயம் ,சக்கரை ,கறிவேப்பிலை ,இவை  அனைத்தும்  போட்டு 1கப்    தண்ணீர் சேர்த்து  அடுப்பில்  வைத்து 25 நிமிடங்கள்  கொதிக்க  விடவும் .






பிறகு  வெந்த  பருப்பில் 1கப் தண்ணீர்  விட்டு  கொதித்த புளி தண்ணீருடன்  சேர்த்து அடுப்பில்  வைத்து  நுரை  வந்தவுடன்  இறக்கி  கொத்தமல்லி தழை  சேர்த்து . நெயில்  கடுகு,மிளகு ,சிரகம் பொடி  தாளித்து  கொட்டவும் . சுவையான  மிளகு ரசம்  ரெடி .



பின் குறிப்பு ;
  மிளகு ரசம்  சளி ,இருமல் ,வயறு பிரச்சனைகள் இவை  அனைத்துக்கும்  மிகவும்  ஏற்றது .