Friday, 25 January 2013

மிளகு ரசம் ( Milagu/ Pepper corn Rasam)

மிளகு  ரசம் (pepper corn rasam)




தேவையான  பொருட்கள் 
  •                   புளி --சிறிய  எலும்பிச்சை பழ அளவு 
  •                   தக்காளி - 2(பொடியாக  நறுக்கியது )
  •                   பெருங்காயம் - 1/4ஸ்பூன் 
  •                   மஞ்சள்பொடி - 1/2 ஸ்பூன் 
  •                   உப்பு - தேவையான  அளவு 
  •                   சர்க்கரை -1/4ஸ்பூன் 
  •                   கறிவேப்பிலை - 5இதழ்கள் 
  •                   கொத்தமல்லி தழை -2ஸ்பூன் 
  •                   துவரம் பருப்பு - 1/4கப் (குக்கரில்  குழைய வேகவைக்கவும் )
  •                   தண்ணீர் -2 கப் 

                     தாளிக்க தேவையான  பொருட்கள் 
  •             கடுகு 1/2ஸ்பூன் 
  •             நெய் - 1ஸ்பூன் 
  •             கறிவேப்பிலை -2இதழ்கள் 
  •             மிளகு ,சீரகம்  பொடி - 11/2ஸ்பூன்  
 செய்முறை 
               ஒரு  பாத்திரத்தில்  புளி ,தக்காளி ,உப்பு ,மஞ்சள்பொடி ,பெருங்காயம் ,சக்கரை ,கறிவேப்பிலை ,இவை  அனைத்தும்  போட்டு 1கப்    தண்ணீர் சேர்த்து  அடுப்பில்  வைத்து 25 நிமிடங்கள்  கொதிக்க  விடவும் .






பிறகு  வெந்த  பருப்பில் 1கப் தண்ணீர்  விட்டு  கொதித்த புளி தண்ணீருடன்  சேர்த்து அடுப்பில்  வைத்து  நுரை  வந்தவுடன்  இறக்கி  கொத்தமல்லி தழை  சேர்த்து . நெயில்  கடுகு,மிளகு ,சிரகம் பொடி  தாளித்து  கொட்டவும் . சுவையான  மிளகு ரசம்  ரெடி .



பின் குறிப்பு ;
  மிளகு ரசம்  சளி ,இருமல் ,வயறு பிரச்சனைகள் இவை  அனைத்துக்கும்  மிகவும்  ஏற்றது .  
                                            

No comments:

Post a Comment