பூண்டு ரசம்
தேவையான பொருட்கள்
- தக்காளி -2
- புளி -எலும்பிச்சை அளவு
- மஞ்சள் பொடி -1/2ஸ்பூன்
- பெருங்காய பொடி -1/2ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- கொத்தமல்லி தழை -2ஸ்பூன்
- பூண்டு -8பல்
வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்
- தனியா-1ஸ்பூன்
- மிளகு -1/2ஸ்பூன்
- சீரகம் -1/2ஸ்பூன்
- வற்றல் மிளகாய் -3
- கறிவேப்பிலை -5
- ஆயில்-1/2ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
நெய் -1ஸ்பூன்
கடுகு -1/2ஸ்பூன்
செய்முறை
புளியை 1 கப் தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊர வைத்து கொள்ளவும்.
பூண்டை தோல் உரித்து கொள்ளவும்
பின் கடாயில் புளி கரைசலை கரைத்து விட்டு தக்காளி,மஞ்சள் பொடி ,பெருங்காயம் ,உப்பு கறிவேப்பிலை சேர்த்து 20 நிமிடம் கொதிக்க விடவும்
.பிறகு மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ளதை 5 நிமிடம் வதக்கி.
பிறகு அடுப்பை அணைத்து அதில் உரித்து வைத்துள்ள பூண்டு ,கறிவேப்பிலை சேர்த்து போட்டு வதக்கவும்
,மிக்ஸ்யில் வறுத்த பொருட்களை சிறிது தண்ணீர் விட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும் .
அரைத்த விழுதை கொதித்து கொண்டிருக்கும் புளி கரைசளுடன் சேர்த்து 10 நிமிடம் கொதித்த பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு
கறிவேப்பிலை சேர்த்து நுரை வந்தவுடன் இறக்கி வைத்து நெயில் கடுகு தாளித்து கொட்டி கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்
No comments:
Post a Comment