வெங்காயம் தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்
- பெரிய வெங்காயம் -4
- ஆப்பில் தக்காளி -3
- வற்றல் மிளகாய் -5
- புளி -ஒரு சின்ன உருண்டை
- உளுத்தம் பருப்பு - 1ஸ்பூன்
- ஆயில் -2ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
- ஆயில் -1ஸ்பூன்
- கடுகு -1/2ஸ்பூன்
- கறிவேப்பிலை-5
செய்முறை
வெங்காயம் ,தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் .
கடாயில் எண்ணெய் விட்டு முதலில் வற்றல் மிளகாய் ,உளுத்தம் பருப்பு
போட்டு 3 நிமிடம் நன்றாக வதக்கவும்
.பின். வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.
பிறகு .புளி ,தக்காளியை சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கவும்
.வதக்கிய பொருட்களை உப்பு சேர்த்து மிக்ஸ்யில் அரைத்து எடுக்கவும் .பிறகு கடுகு , கறிவேப்பிலை தாளித்து பரிமாறவும் .
பின் குறிப்பு
இட்லி ,தோசை ,சப்பாத்தி இவை அனைத்துக்கும் தொட்டு கொள்ளலாம்
No comments:
Post a Comment