வத்தல் குழம்பு
தேவையான பொருட்கள்
· துவரம் பருப்பு - ஒரு ஸ்பூன்
· வெந்தயம் - ½ ஸ்பூன்
· கடுகு - ஒரு ஸ்பூன்
· கறிவேப்பிலை - தேவையான அளவு
· வெல்லம் - ½ ஸ்பூன்
· நல்லெண்ணெய் - 1 ½ கரண்டி
· பெருங்காயம் -ஒரு பின்ச்
· வெங்காயம் - 100 gram
· மஞ்சள் பொடி - ½ ஸ்பூன்
· சாம்பார் பொடி - 1 ½ ஸ்பூன்
· வற்றல் மிளகாய் - 1 அல்லது 2 nos
புளியை 1 கப்
வெதுவெதுப்பான நீரில் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும், பிறகு அதில் 2 கப் தண்ணீரை
விட்டு நன்றாக கரைத்து வைத்து
கொள்ளவும்.
முதலில் ஒரு
வாணலியில் எண்ணையை விட்டு காய்ந்த
பிறகு கடுகு
வெந்தயம் துவரம் பருப்பு
,கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய்
(வர மிளகாய் ), போட்டு தாளித்து
கொள்ளவும், அதில் சின்னவேங்கயத்தை போட்டு
5 நிமிடங்கள்
வதக்கவும்,
பிறகு அதில் சாம்பார்
பொடியை போட்டு 1 நிமிடம் வதக்கிய பின்
அதில் புளி கரைசலை பிழிந்து விடவும் 5 நிமிடங்கள்
கொதித்தவுடன் உப்பு வெல்லம் சேர்த்து நன்றாக குழம்பு
கட்டியாகும் (சுமார் 25 -30 நிமிடங்கள் வரை) வரை அடுப்பில் வைத்து இறக்கவும்
பின் குறிப்பு
; குழம்பில் வெங்காயதுக்கு பதில் முருங்கை
,பரங்கிக்காய் ,அப்பளம் ,மனத்தக்காளி வற்றல்
,சுண்டக்காய் வற்றல் இவை அனைத்தும் போடலாம்
முருங்கைக்காய், பரங்கிக்காய்
போட்டு செய்வதானால், காயை வதக்காமல் குழம்பு
கொதிக்கும் பொது போட்டால் போதும்.
வத்தல் குழம்புடன் பருப்பு துவையல் சேர்த்து
சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
சின்ன வெங்காயம் போட்டு செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
I've tried this with garlic but since onion s my favorite ll try tis one 4 sure..:)
ReplyDeleteI've tried this with garlic but since onion s my fav ll try tis 4 sure..:)
ReplyDeleteVatha kuzhambu will taste very good with garlic but still, onion tastes different, you can also try doing it with Sundakkai, Urad pappad, drum stick, ladies finger, pumkin etc. the peeled skin of Orange, it is very different and tasty. The skin of Orange is good in citric acid and also contains several nutrients.
Delete