Showing posts with label Kuzhambu variety. Show all posts
Showing posts with label Kuzhambu variety. Show all posts

Thursday, 28 March 2013

சரவண பவன் இட்லி சாம்பார் ( idly sambar )


சரவண  பவன்  இட்லி  சாம்பார் 


 தேவையான பொருட்கள் 

  •    புளி -ஒரு சிறிய உருண்டை ( 2கப் தண்ணீரில் ஊர வைக்கவும் )
  •    தக்காளி -2
  •    சின்ன வெங்காயம் -10
  •    முருங்கைக்காய் -1(தேவையானால்)
  •    கேரட் -2(தேவையானால் )
  •    நெய்- 2ஸ்பூன் 
  •    சக்கரை -1ஸ்பூன் 
  •     சாம்பார் பொடி -1 1/2ஸ்பூன்  
  •     மிளகாய் பொடி- 1ஸ்பூன் 
  •    உப்பு -தேவையான அளவு 
    
          

 குக்கரில்  வேக வைக்க  வேண்டிய பொருட்கள் 

  • மைசூர் துவரம் பருப்பு -1கப் 
  • தக்காளி -2
  • கத்திரிக்காய் -2
  • சின்ன வெங்காயம் -7
  • மஞ்சள் பொடி -1/4ஸ்பூன் 
  • பெருங்காய பொடி-1/2ஸ்பூன் 

வறுத்து  அரைக்க  தேவையான பொருட்கள் 

  •   தனியா -1/2ஸ்பூன் 
  •   உளுத்தம் பருப்பு -1/4ஸ்பூன் 
  •   வெந்தயம் -1/4ஸ்பூன் 
  •   கடலை பருப்பு -1/4ஸ்பூன் 
  •   தேங்காய் துருவியது-3ஸ்பூன் 
  •   வரமிளகாய்-1

தாளிக்க  தேவையான பொருட்கள் 

  • ஆயில் -1 ஸ்பூன் 
  • கடுகு -1/2ஸ்பூன் 
  • உளுத்தம் பருப்பு -1/4ஸ்பூன்
  • வர மிளகாய் -1 
  • கறிவேப்பிலை -7

செய்முறை 

குக்கரில்  வேக வைக்க கொடுத்துள்ளதை  5-6 விசில்  விட்டு  குக்கரில்  வேக வைத்து கொள்ளவும்
.புளியை  2டம்ளர்  தண்ணீர்  விட்டு ஊர வைத்து  கொள்ளவும்
. வெங்காயத்தை  தோல்  உரித்து  கொள்ளவும்.தக்காளியை  பொடியாக  நறுக்கி கொள்ளவும்

.கடாயில்  ஆயில்  விட்டு  தாளித்து  கொள்ளவும்.
பின்  வெங்காயத்தை  போட்டு  3 நிமிடம்  வதக்கி கொள்ளவும்.
பிறகு  தக்காளி,காய்கறிகளை  போட்டு  5 நிமிடங்கள்  வதக்கிய  பின் 
 புளி  தண்ணீரை விட்டு உப்பு ,மிளகாய் பொடி ,சாம்பார் பொடி போட்டு  கொதிக்க விடவும் 





..மற்றொரு  கடாயில்  1 ஸ்பூன்  ஆயில்  விட்டு  வறுக்க  கொடுத்துள்ளதை  வறுத்து

  தண்ணீர்  விட்டு  மிக்ஸ்யில்  அரைத்து  கொள்ளவும்.

புளிதண்ணீரில்  காய்கள்  வெந்த  பின்  வேக வைத்துள்ள  பருப்பு கலவையை  போட்டு 1 நிமிடம்  கொதித்த  பின்  அரைத்த  விழுதை  சேர்த்து  மேலும்  10 நிமிடங்கள்  கொதிக்க  வைத்து
  கொத்தமல்லி தூவி  இறக்கி  வைத்து  மேலாக  நெய்  விட்டு  பரிமாறவும் .










பின்  குறிப்பு 

  தேவையானால்  காய்கள்  வேகும்போது  தண்ணீர்  சேர்த்து  கொள்ளவும்.


Saturday, 16 March 2013

கேரளா மாம்பழம் மோர் குழம்பு (kerala mango more kuzambu)


கேரளா  மாம்பழம்  மோர்  குழம்பு 



                      தேவையான  பொருட்கள் 

  • மாம்பழம் -2
  • கறிவேப்பிலை -4
  • மஞ்சள் பொடி -1/2ஸ்பூன் 
  • உப்பு -தேவையான  அளவு 
  • மோர் -1/2கப் (கடைந்த  கட்டியான  மோர் )

அரைக்க  தேவையான  பொருட்கள் 

  • தேங்காய்  துருவல் -1கப் 
  • வரமிளகாய் -5

 தாளிக்க தேவையான  பொருட்கள் 

  •  தேங்காய்எண்ணெய் -1ஸ்பூன் 
  •  கடுகு -1/2ஸ்பூன் 
  •   வெந்தயம்-1/4ஸ்பூன் 
  •   கறிவேப்பிலை -5

செய்முறை 

மாம்பழத்தை  பெரிய  துண்டுகளாக  வெட்டி  கொள்ளவும்
.ஒரு அகன்ற  பாத்திரத்தில்  மாம்பழம் ,மாம்பழகொட்டை  சேர்த்து  தேவையான  அளவு  தண்ணீர்  விட்டு   மஞ்சள்  பொடி ,உப்பு, கறிவேப்பிலை  சேர்த்து  25 நிமிடங்கள்  கொதிக்க  விடவும்
.பிறகு  அரைக்க  வேண்டியபொருட்களை  தண்ணீர்  விட்டு  மிக்ஸ்யில்  அரைத்து  கொள்ளவும்
.பின்  வெந்த  மாம்பழத்துடன்  அரைத்த  தேங்காய்  விழுதை  சேர்த்து  10-15 நிமிடங்கள்  கொதிக்க  விடவும் 
. பின்  மோரை  விட்டு


  ஒரு  நுரை  வந்தவுடன்  இறக்கி  வைத்து  தாளித்து  கொட்டி  பரிமாறவும்



        

Monday, 25 February 2013

பூசணிக்காய் மோர் கூட்டு ( Ash gourd buttermilk gravy)


பூசணிக்காய்  மோர்  கூட்டு  (Ash gourd buttermilk gravy) 




தேவையான  பொருட்கள் 

  •  பூசணிகாய் -1/2கிலோ 
  •  கறிவேப்பிலை -6
  • கட்டியான  மோர் -1கப் 
  • Salt                     -  To taste

அரைக்க  தேவையான  பொருட்கள் 

  •  தேங்காய் துருவல் -1கப் 
  • வற்றல் மிளகாய் -5
  • சீரகம் -1/4ஸ்பூன் 
  • பச்சரிசி -1ஸ்பூன் 

தாளிக்க  தேவையான  பொருட்கள் 

  • தேங்காய்  எண்ணெய் -1ஸ்பூன் 
  • கடுகு -1/2ஸ்பூன் 
  • வெந்தயம் -1/2ஸ்பூன் 
  • கறிவேப்பிலை -3

செய்முறை 

பூசணிகாயை  நிளமாக  நறுக்கி  கொள்ளவும்
 . ஒரு  பாத்திரத்தில்  11/2 கப்  தண்ணீர்  விட்டு  உப்பு  சேர்த்து காயை  வேக  வைக்கவும் .பின் அரைக்க  கொடுத்துள்ள  பொருட்களை  அரைத்து  கொள்ளவும்
.காய்  வெந்த  பிறகு  அரைத்த  பொருட்களை  சேர்த்து  10 நிமிடம்  கொதிக்க  வைக்கவும்

 .பிறகு  கடைந்த  கட்டியான  மோரை  விட்டு

  சுற்றிலும்  நுரை  வந்தவுடன்  இறக்கி  வைத்து  தேங்காய் எண்ணெயில்  தாளித்து  கொட்டவும்.

   பின்  குறிப்பு 

     1.மோர்  கூட்டுக்கு  பருப்பு  துவையல் .தேங்காய் துவையல்  தொட்டு கொள்ள  சுவையாக  இருக்கும்.

Thursday, 14 February 2013

கீரை பொரிச்சகூட்டு (keerai poricha kuttu)


கீரை  பொரிச்சகூட்டு 



                          தேவையான  பொருட்கள் 

  •   கீரை -3கப் (பொடியாக நறுக்கியது )
  •   தண்ணீர் - தேவையான அளவு 
  •   உப்பு -தேவையான அளவு 
  •   துவரம் பருப்பு -1/2கப் 

 அரைக்க  தேவையான  பொருட்கள் 

  •  தேங்காய் துருவல் -1/2கப் 
  •   வற்றல் மிளகாய் -3-4
  •   சீரகம் - 1ஸ்பூன் 

தாளிக்க தேவையான  பொருட்கள் 

  •     தேங்காய் எண்ணெய் -1ஸ்பூன் 
  •     கடுகு -1/2ஸ்பூன் 
  •      உளுத்தம் பருப்பு -1/2ஸ்பூன் 
  •       கறிவேப்பிலை -5இதழ்கள் 

செய்முறை 

 கீரையை  ஒரு  டம்ளர்  தண்ணீர்  விட்டு  வேகவைத்து  கொள்ளவும்.
 பின் குக்கரில்  துவரம் பருப்பை  குழைய  வேகவைக்கவும்.

. கீரையை  நன்றாக  மசித்து  கொள்ளவும் .வெந்த  கீரையுடன்  பருப்பை  போட்டு  10 நிமிடங்கள்  கொதிக்க விடவும்.
பிறகு  அரைக்க  கொடுக்கப்பட்டுள்ள  பொருட்களை 3/4  தண்ணீர்  விட்டு   மிக்ஸ்யில் அரைத்து கொள்ளவும்
. கொதித்து  கொண்டிருக்கும்  கீரை  பருப்புடன்  அரைத்த  விழுதை  சேர்த்து 
 15 நிமிடங்கள்  கொதிக்க விட்டு இறக்கி  தாளித்து  கொட்டவும் .



  பின் குறிப்பு 

1.கீரை -அரை கீரை ,முளை கீரை ,தண்டு கீரை, பசலை கீரை இவை  அனைத்திலும்  பொரிச்ச கூட்டு  செய்யலாம் .
2.வத்தல்  குழம்புக்கு  தொட்டு  கொள்ள  மிகவும்  சுவையாக  இருக்கும் 


Friday, 8 February 2013

கேரளா மோர் குழம்பு (Kerala more kuzambu)


கேரளா  மோர்  குழம்பு (Kerala butter milk gravy)



   தேவையான  பொருட்கள் 

  •  கடைந்த  கட்டியான மோர் -1கப் 
  •  வெண்டைக்காய் -5-6
  •  மஞ்சள் பொடி -1/2ஸ்பூன் 
  • உப்பு -தேவையான  அளவு 
  • கறிவேப்பிலை -3இதழ்கள் 
  • தண்ணீர் -2கப் 

தாளிக்க  தேவையான  பொருட்கள்

  • தேங்காய் எண்ணெய் -2ஸ்பூன்  
  •  கடுகு 1/2ஸ்பூன் 
  •  வெந்தயம் -3/4ஸ்பூன் 
  •  கறிவேப்பிலை -3இதழ்கள் 

அரைக்க தேவையான பொருட்கள் 

  • தேங்காய் துருவல் -1/2கப் 
  • பச்சை மிளகாய் -3-4
  • சீரகம் -3/4ஸ்பூன் 

செய்முறை 

கடாயில் தண்ணீர்  விட்டு  மஞ்சள் பொடி,கறிவேப்பிலை  போட்டு  வெண்டைக்காயை  சேர்த்து  அடுப்பில்  வைத்து 20-30நிமிடங்கள்  கொதிக்க  வைக்கவும் 
.பிறகு  அரைத்த  பொருட்களை  சேர்த்து
  மேலும்  10 நிமிடங்கள் கொதித்த  பின் மோரை  விட்டு

  ஒரு  நுரை  வந்தவுடன்  அனைத்து  தாளித்து  கொட்டவும் .



 பின்  குறிப்பு 

1.மோர்  குழம்புக்கு  சேர்க்கும்  காய்கறிகள் :சேனை கிழங்கு ,சேப்பன் கிழங்கு ,பெங்களூர் கத்திரிக்காய் ,வாழைகாய்,பூசணிகாய்  இவை  அனைத்தும்  சேர்த்து  செய்யலாம் 
2.மோர்  குழம்பு  கொதிக்க  வேண்டாம்  நுரை  வந்தால்  போதும்.கொதித்தால்  தண்ணியாக  போய்விடும் 
3.பருப்பு  பொடி சாதத்துக்கு  தொட்டு  கொள்ள மோர் குழம்பு  சுவையாக  இருக்கும் 

  

Sunday, 27 January 2013

பொடிபோட்ட சாம்பார் (Simple and easy sambar for beginners)

பொடிபோட்ட   சாம்பார் 



                   தேவையான  பொருட்கள் 
  •              துவரம் பருப்பு -1கப் 
  •              காய்கறி - முள்ளங்கி
  •              புளி - ஒரு சிறிய  உருண்டை (சிறிய  எலும்பிச்சை பழ அளவு )
  •              சாம்பார்  பொடி - 2 டேபிள் ஸ்பூன் 
  •              மஞ்சள் பொடி -1/2ஸ்பூன் 
  •              பெருங்காயம் - 1/2ஸ்பூன் 
  •              கறிவேப்பிலை - 5இதழ்கள் 
  •              உப்பு  - தேவையான அளவு 
  •              தாளிக்க  தேவையான  பொருட்கள் 
  •              ஆயில் -1/2ஸ்பூன் 
  •              கடுகு - 1/2ஸ்பூன் 
  •              உளுத்தம் பருப்பு - 1/4ஸ்பூன் 
  •              கறிவேப்பிலை - 3இதழ்கள் 
  •              கொத்தமல்லி தழை -1ஸ்பூன்
 செய்முறை 
               புளியை  1/2மணிநேரம்  2 டம்ளர் தண்ணீரில்  ஊர வைக்கவும்.

 துவரம் பருப்பை  21/2 டம்ளர்  தண்ணீர்  விட்டு  குக்கரில் 5 விசில்  வரும் வரை  அடுப்பில்  வைத்து  இறக்கவும் 

 ஒரு  கடாயில்  புளி  தண்ணீரை  விட்டு  அதில்  காய் , உப்பு ,மஞ்சள் பொடி ,பெருங்காயம் ,கறிவேப்பிலை  அனைத்தையும்  போட்டு  அடுப்பில்  வைத்து  சுமார்  20-25 நிமிடங்கள்  நன்றாக  கொதித்த  பின்

  வெந்த  பருப்பை  போட்டு  10 நிமிடங்கள்  கொதித்த  பிறகு  இறக்கி  வைத்து  எண்ணெயில்  கடுகு ,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை கொத்தமல்லிதழை  சேர்த்து   தாளித்து  பரிமாறவும் .

   
 பின்  குறிப்பு 
              முள்ளங்கிக்கு  பதில்  முருங்கை , வெண்டைக்காய் ,கத்திரிக்காய் ,குடை  மிளகாய் .இவை  அனைத்தும்  சேர்த்து  சாம்பார்  செய்யலாம்