சரவண பவன் இட்லி சாம்பார்
தேவையான பொருட்கள்
- புளி -ஒரு சிறிய உருண்டை ( 2கப் தண்ணீரில் ஊர வைக்கவும் )
- தக்காளி -2
- சின்ன வெங்காயம் -10
- முருங்கைக்காய் -1(தேவையானால்)
- கேரட் -2(தேவையானால் )
- நெய்- 2ஸ்பூன்
- சக்கரை -1ஸ்பூன்
- சாம்பார் பொடி -1 1/2ஸ்பூன்
- மிளகாய் பொடி- 1ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
குக்கரில் வேக வைக்க வேண்டிய பொருட்கள்
- மைசூர் துவரம் பருப்பு -1கப்
- தக்காளி -2
- கத்திரிக்காய் -2
- சின்ன வெங்காயம் -7
- மஞ்சள் பொடி -1/4ஸ்பூன்
- பெருங்காய பொடி-1/2ஸ்பூன்
வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்
- தனியா -1/2ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு -1/4ஸ்பூன்
- வெந்தயம் -1/4ஸ்பூன்
- கடலை பருப்பு -1/4ஸ்பூன்
- தேங்காய் துருவியது-3ஸ்பூன்
- வரமிளகாய்-1
தாளிக்க தேவையான பொருட்கள்
- ஆயில் -1 ஸ்பூன்
- கடுகு -1/2ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு -1/4ஸ்பூன்
- வர மிளகாய் -1
- கறிவேப்பிலை -7
செய்முறை
குக்கரில் வேக வைக்க கொடுத்துள்ளதை 5-6 விசில் விட்டு குக்கரில் வேக வைத்து கொள்ளவும்
.புளியை 2டம்ளர் தண்ணீர் விட்டு ஊர வைத்து கொள்ளவும்
. வெங்காயத்தை தோல் உரித்து கொள்ளவும்.தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
.கடாயில் ஆயில் விட்டு தாளித்து கொள்ளவும்.
பின் வெங்காயத்தை போட்டு 3 நிமிடம் வதக்கி கொள்ளவும்.
பிறகு தக்காளி,காய்கறிகளை போட்டு 5 நிமிடங்கள் வதக்கிய பின்
புளி தண்ணீரை விட்டு உப்பு ,மிளகாய் பொடி ,சாம்பார் பொடி போட்டு கொதிக்க விடவும்
..மற்றொரு கடாயில் 1 ஸ்பூன் ஆயில் விட்டு வறுக்க கொடுத்துள்ளதை வறுத்து
தண்ணீர் விட்டு மிக்ஸ்யில் அரைத்து கொள்ளவும்.
புளிதண்ணீரில் காய்கள் வெந்த பின் வேக வைத்துள்ள பருப்பு கலவையை போட்டு 1 நிமிடம் கொதித்த பின் அரைத்த விழுதை சேர்த்து மேலும் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து
கொத்தமல்லி தூவி இறக்கி வைத்து மேலாக நெய் விட்டு பரிமாறவும் .
பின் குறிப்பு
தேவையானால் காய்கள் வேகும்போது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
Excellent...
ReplyDeleteThank you for the compliments, plz try other recipes as well and give your feedback.
Delete