பூரி மசால்
பூரிக்கு தேவையான பொருட்கள்
- கோதிமை மாவு -3கப்
- சொஜ்ஜி ரவை -3ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- தண்ணீர் -தேவையான அளவு
- ஆயில் -2கப்
முதலில் கோதிமையை ஒரு பேசனில் போட்டு அதனுடன் ரவை ,உப்பு சேர்த்து
தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.கையில் ஒட்டாமல் மாவை பிசைந்து கொள்ளவும்
.பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் வட்டமாக இடவும்
.கடாயில் ஆயில் விட்டு ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்.
மசால்
தேவையான பொருட்கள்
- உருளை கிழங்கு -3
- வெங்காயம் -2
- தக்காளி -2
- பச்சை பட்டாணி -1/4கப்
- வரமிளகாய் பொடி -2ஸ்பூன்
- கடுகு -1/2ஸ்பூன்
- கறிவேப்பிலை -5
- ஆயில் -3ஸ்பூன்
- மஞ்சள் பொடி -1/4ஸ்பூன்
- தனியா போடி 1/2ஸ்பூன்
- கொத்தமல்லி தழை -3ஸ்பூன்
செய்முறை
உருளை கிழங்கை குக்கரில் வேக வைத்து மசித்து கொள்ளவும்
.வெங்காயம் ,தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும் .
கடாயில் ஆயில் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும்
.பின் வெங்காயத்தை போட்டு 5 நிமிடங்கள் வதக்கிய பின்
தக்காளி ,பட்டாணி சேர்த்து 7 நிமிடம் வதக்கி கொள்ளவும்
.பிறகு மஞ்சள் பொடி ,தனியா பொடி,வரமிளகாய் பொடி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு
தண்ணீர் விட்டு மசித்த உருளை கிழங்கை சேர்த்து 8 நிமிடங்கள் கொதிக்க விட்டு
இறக்கி வைத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும் .
பின் குறிப்பு
தேவையானால் கரம் மசாலா பொடி,கிராம்பு சேர்த்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment