Monday, 15 July 2013

மேத்தி பராத்தா (METHI PARATHA)


மேத்தி பராத்தா  



வெந்தயம்
வெந்தயம் சிறந்த மருத்துவ பயன்களை உடையது. ஆயிரக்கணக்கான வருடங்களாக சமையலிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீரையும் விதையைப் போலவே சமையலுக்கும், மருத்துவத்திற்கும் பயனாகிறது. வெந்தய செடியின் விசேஷம் என்னவென்றால் தான் வளர்ந்த பூமிக்கு திரும்பவும் நைட்ரஜன் உரத்தை காத்து வைக்கும் நன்றியுள்ள தாவரம். ஒன்று (அ) இரண்டடி உயரம் வளரும்

பயன்கள்


அ. உள்ளுக்கு நிறைந்த நார்ச்சத்து இருப்பதாலும், இதில் உள்ள லவணசாரம் என்ற பொருளால் ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க முடியும் என்பதாலும், வெந்தயம் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. 10 (அ) 20 கிராம் வெந்தயத்தை உணவுக்கு 5 (அ) 10 நிமிடங்களுக்கு முன்பு அல்லது உணவுடன் சாப்பிட்டு வர, இரத்த சர்க்கரை அளவு குறையும். டயாபடீஸால் ஏற்படும் ஆண்மை குறைவுக்கு – வறுத்து பொடித்த வெந்தயப் பொடி – 2 டீஸ்பூன், அரை ஸ்பூன் சீரகம், தனியா பொடி – 1 டீஸ்பூன் – சேர்த்து உட்கொள்ளுதல் பயனளிக்கும். வெந்தயத்தை முளை கட்டி உபயோகித்தால் பயன்கள் அதிகம். வெந்தயப் பொடியை 2 டீஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடித்து வருதல் நீரிழிவு நோயாளிக்கு நல்லது.
அசதி, களைப்பு, உடல் வலி, மறைய வெந்தயப் பொடியை எடுத்துக் கொள்ளலாம்.
பசியை தூண்டும், வயிறு உப்புசம், வாய்வுக் கோளாறுகளுக்கு வெந்தயப் பொடி, பெருங்காயம் இரண்டிலும் 1/2 தேக்கரண்டி எடுத்து மோரில் கலக்கி குடிக்கலாம்.
உடல் சூடு, உடல் காங்கை குறைய இரவில் வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை காலையில் குடித்து வரவும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் பிரச்சனைக்கு, மஞ்சள்பொடி கலந்த வெந்தய கஷாயத்தால் கழுவினால் குணமாகும்.
வெந்தய கஷாயம் நரம்புத்தளர்ச்சியை போக்கும்.
தொண்டைப்புண், வாய்ப்புண்களுக்கு வெந்தய இலை விதைகளால் செய்த கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளிக்கலாம். தினம் 2 (அ) 3 முறை செய்யலாம்.
பிரசவித்த தாய்மார்களின் தாய்ப்பால் பெருக உதவும் அரிசியில் உளுந்து கலக்காமல், ஆறுக்கு ஒன்று என்ற அளவில் (அரிசி 6 பாகம், வெந்தயம் 1 பாகம்) வெந்தயம் அல்லது தோசை மாவு செய்து புளிக்க வைத்து அதில் தோசை வார்த்து தாய்மார்களுக்கு கொடுப்பது வழக்கம்.
இரண்டு தேக்கரண்டி வெந்தயம் (அ) சிறுகட்டு வெந்தயக்கீரையை அரிசியுடன் சமைத்து சிறிது உப்பு சேர்த்து உண்டு வர, ரத்த சோகை மறையும். உடலில் இரும்புச்சத்து சேரும்.
தூக்கம் வர வெந்தயகீரை சாற்றுடன் (2 டீஸ்பூன்) ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, தூங்கப்போகும் போது குடிக்கவும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போக – வெந்தயத்தை பொடித்து, சம அளவு வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்து சிறு உண்டைகளாக உருட்டி சாப்பிட்டு வர வேண்டும். இதை மாத விளக்கு ஏற்படும் முந்தைய நாட்களிலிருந்து சாப்பிட்டு வர வேண்டும்.
(ஆ) வெளிப்பூச்சுக்கு
இரவில் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் விழுதாக அரைத்து தலையில் தடவிக் கொள்ளவும். இதை வாரம் 2 (அ) 3 முறை செய்தால் பொடுகு மறையும்.
உடல் வீக்கம் புண்களுக்கு வெந்தய களிம்பை சிறிது சூடாக்கி தடவினால் குறிப்பு: உதிரப்போக்கு உள்ளவர்கள், அதிக உதிரப்போக்கு நோய்கள் உள்ளவர்கள் வெந்தயத்தை தவிர்க்க வேண்டும்
         
வட இந்தியாவில் வெந்திய கீரையால் செய்யும் ரொட்டி, சப்பாத்தி மிகவும் பிரசித்தம். ஆரோக்யமான உணவான வெந்தைய சப்பாத்தி இதோ   


மேத்தி பராத்தா  


தேவையான  பொருட்கள் 
  •   கோதுமை மாவு -3கப் 
  •   மஞ்சள் பொடி -1/4ஸ்பூன் 
  •   சீரகபொடி -1/2ஸ்பூன் 
  •   தனியா பொடி -1/2ஸ்பூன் 
  •   மிளகாய் பொடி -1/2ஸ்பூன் 
  •   வெந்தயகீரை -1கப் 
  •   உப்பு -தேவையான அளவு    
  •   தண்ணீர் -தேவையான அளவு 
  •   நெய் -தேவையான அளவு 
  •  ஆயில் -2ஸ்பூன் 

  செய்முறை 




          வெந்தய கீரையை  பொடியாக  நறுக்கி  கொள்ளவும். பின்  கடாயில்  ஆயில்  விட்டு  காய்ந்த  பின்  மஞ்சள் பொடி ,சீரக பொடி ,மிளகாய் பொடி,தனியா பொடி,நறுக்கிய  கீரை  இவை  அனைத்தையும்  சேர்த்து  10 நிமிடங்கள்  வதக்கி  கொள்ளவும்.பிறகு  ஒரு  பேசனில்  கோதுமை  மாவை  போட்டு  உப்பு ,வதக்கி  வைத்துள்ள  கீரை  மசாலா,தண்ணீர்  சேர்த்து  பிசைந்து  கொள்ளவும்.பிறகு சிறிய  உருண்டைகளாக்கி  சப்பாத்திகளாக  இடவும்.பின்  சப்பாத்தி  கல்லில்  இருபுறமும்  போட்டு  எடுத்து  நெய்  தடவி  பரிமாறவும்.

பின்  குறிப்பு 
          இதற்கு  தொட்டு கொள்ள ஆனியன் ரெய்தா   சுவையாக  இருக்கும் .
           தேவையானால்  கரம் மசாலா  சேர்த்து கொள்ளவும் .
        
         
        
           
             

No comments:

Post a Comment