Wednesday, 30 January 2013

குடைமிளகாய் சட்னி (capsicum chutney)

குடைமிளகாய்  சட்னி (Capsicum chutney) 




                            தேவையான  பொருட்கள் 
  •  குடைமிளகாய் -1
  • பெரிய வெங்காயம் -2
  • தக்காளி -2 சிறியது 
  • வற்றல் மிளகாய் -4
  • மஞ்சள் பொடி -1/2ஸ்பூன் 
  • உப்பு -தேவையான அளவு 
  • ஆயில் -11/2ஸ்பூன் 
   தாளிக்க  தேவையான  பொருட்கள் 
  •   கடுகு-ஸ்பூன் 
  •   ஆயில் -1/2ஸ்பூன் 
  •    கறிவேப்பிலை -3இதழ்கள் 
 செய்முறை 
                   வெங்காயம் ,குடைமிளகாய் ,தக்காளி இவை  அனைத்தையும்  நறுக்கி  கொள்ளவும் .கடாயில்  எண்ணெய்  விட்டு  வற்றல் மிளகாயை  முதலில்  போட்டு  1 நிமிடம்  வதக்கிய  பின்  

வெங்காயத்தை  சேர்த்து 2நிமிடங்கள்  வதக்கவும்.






பின்  குடைமிளகாய் ,தக்காளியை மஞ்சள் பொடி,பெருங்காயம் ,   சேர்த்து 7-10நிமிடங்கள்  நன்றாக  வதக்கவும் .
.பிறகு  உப்பு சேர்த்து  மிக்ஸ்யில் அரைத்து  எடுக்கவும் .அரைத்த  பின் கடுகு .கறிவேப்பிலை  தாளித்து  பரிமாறவும் .




    

No comments:

Post a Comment