Wednesday, 30 January 2013

வெஜி டேபிள் ஊத்தப்பம்(Vegetable Uthappam)

வெஜி டேபிள்  ஊத்தப்பம்(Vegetable Uthappam)






      தேவையான  பொருட்கள் 
  • இட்லி  அரிசி - 2கப் 
  • உளுத்தம் பருப்பு - 3/4
  • வெந்தயம் -1/2ஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 
   தேவையான  காய்கறிகள் 
  •     கேரட் -2
  •     குடைமிளகாய் -1
  •      தக்காளி -2
  •      வெங்காயம் -2 பெரியது 
  •     நல்லெண்ணெய் -தேவையான  அளவு

செய்முறை 




 அரிசி ,உளுத்தம்பருப்பு  இரண்டையும்  5-6 மணிநேரம்  ஊர  வைக்கவும் . பிறகு  மிக்ஸ்யில் அரிசி  பருப்பு ,வெந்தயம் ,உப்பு  சேர்த்து   நெய்சாக  அரைத்து  எடுக்கவும்.

.அரைத்த  மாவை 6-7 மணிநேரம்  வெளியில்  வைக்கவும் . காய்கறிகளை  தனித்தனியாக  பொடியாக  நறுக்கி கொள்ளவும்.

.தோசை  கல்லில்  மாவை  ஊத்தப்பாமாக  சுட்டு  அதில்  வெங்காயம் ,காய்கறிகளை  போட்டு  நல்லெண்ணை  விட்டு  இரு புறமும்  திருப்பி  போட்டு  எடுக்கவும் .சுவையான   வெஜிடேபிள்  ஊத்தப்பம்  ரெடி .


       பின் குறிப்பு 

      காய்கறிகளை  வதக்கியும்  சேர்க்கலாம். இதற்கு  தொட்டு கொள்ள   குடைமிளகாய்  சட்னி  சுவையாக  இருக்கும்  

No comments:

Post a Comment