தேவையான பொருட்கள்
-
பச்சரிசி -2கப்
-
மிளகு -1ஸ்பூன்
- துவரம்பருப்பு
-1/2ஸ்பூன்
- சீரகம் -
1/2ஸ்பூன்
- வற்றல்மிளகாய் -2
- ஆயில் -3ஸ்பூன்
- கறிவேப்பிலை - 6இதழ்கள்
- பெருங்காயம் -1ஸ்பூன்
- உப்பு -தேவையானஅளவு
- கடுகு
-1/2ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு
-1/2ஸ்பூன்
- கடலைபருப்பு
-1/2ஸ்பூன்
- தேங்காய்
துருவல்
-1/2கப்
செய்முறை
பச்சரிசி ,மிளகு ,சீரகம் ,துவரம்பருப்பு இவை அனைத்தையும் மிக்ஸ்யில் பொடியாக பொடித்து கொள்ளவும் .
பிறகு ஒருகடாயில் ஆயில் விட்டு கடுகு ,உளுத்தம்பருப்பு ,கடலைபருப்பு ,கறிவேப்பிலை தாளிக்கவும் .
தாளித்த பிறகு தண்ணீர் விட்டு 7 நிமிடம் தண்ணீர் கொதித்த பிறகு பொடித்த அரிசி பொடி , தேங்காய்துருவல் இரண்டையும் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும் .
நன்றாக வெந்த பிறகு உருண்டைகளாக பிடித்து
குக்கரில் ஆவியில் 7நிமிடங்கள் வைத்து எடுக்கவும் .சுவையான அரிசி கொழுக்கட்டை ரெடி
பின்குறிப்பு
இதற்கு தொட்டு கொள்ள தேங்காய்சட்னி சுவையாக இருக்கும் .
No comments:
Post a Comment