Showing posts with label Snacks. Show all posts
Showing posts with label Snacks. Show all posts

Wednesday, 3 April 2013

பிரென்ச் ப்ரை ( CRISPY FRENCH FRY) home made


பிரென்சு  ப்ரை 


                        தேவையான பொருட்கள் 

  • உருளை கிழங்கு -3
  • தண்ணீர் -தேவையான அளவு 
  • உப்பு -தேவையான அளவு 
  • கருப்பு மிளகு பொடி -தேவையான அளவு 
  • ஆயில் -பொரிபதற்கு தேவையான அளவு 

செய்முறை 

      உருளை கிழங்கை  தோல்  சீவி  நீளமாக நறுக்கி  கொள்ளவும்.

       ஒரு  பாத்திரத்தில்  தண்ணீர்  விட்டு   நன்றாக கொதித்த  பிறகு உப்பு  சேர்த்து  நறுக்கி  வைத்துள்ள  உருளைகிழங்கை  போட்டு  20 நிமிடங்கள்  மூடி  வைக்கவும்.
 உருளை கிழங்கு  அரை  வேக்காடாக வெந்தால்  போதும்.வெந்த உருளைகிழங்கை  வடிகட்டி 


 ஒரு  காட்டன்  துணியில்  போட்டு  அது  நன்றாக  தண்ணீரை  உரிஞ்சிய  பிறகு  அதை  ஒரு  கட்டியான  கவரில்  போட்டு  ப்ரீசரில்  3 மணிநேரம்  வைக்கவும்.




பின்  அடுப்பில்  கடாயை  வைத்து  ஆயில்  விடவும். 
ப்ரீசரில்  வைத்துள்ள  உருளை கிழங்கை  எடுத்து
  ஆயில்  காய்ந்த  பின்  கொஞ்ச  கொஞ்சமாகபோட்டு  பொன்னிறமாக   பொரித்து  எடுக்கவும்.
 பின்  தட்டில்  வைத்து  மேலாக  மிளகு பொடி
 சேர்த்து  தக்காளி  சாஸ்சுடன்  பரிமாறவும்.

Friday, 15 March 2013

காரடையான் நோம்பு உப்பு அடை (karadaiyan nombu salt adai)


காரடையான்  நோம்பு உப்பு  அடை 



                         தேவையான  பொருட்கள் 

  •  அரிசி -1கப் (பச்சரிசி )
  •  தண்ணீர் -2கப் 
  •  உப்பு -தேவையான அளவு 
  • தேங்காய் -3/4கப் (பல்லாக நறுக்கியது )
  • வாழை இலை -1

தாளிக்க  தேவையான  பொருட்கள் 

  •  ஆயில் -2ஸ்பூன் 
  •  கடுகு -1/2ஸ்பூன் 
  •  உளுத்தம் பருப்பு -1/2ஸ்பூன் 
  •  பச்சைமி ளகாய் -3பொடியாக  நறுக்கியது)
  •  கறிவேப்பிலை -7
  • பெருங்காய பொடி -1ஸ்பூன் 

செய்முறை 

அரிசியை  1 மணி நேரம்  ஊர  வைத்தா  பின்  ஒரு  காட்டன்  துணியில்  அரிசியை  காய  வைத்து  (சுமார்  20-25)
 மிக்ஸ்யில்  நெய்சாக  பொடித்து  எடுக்கவும். .பிறகு  கடாயில் அ ரிசி  பொடியை  போட்டு 10 நிமிடங்கள்  வறுத்து  எடுக்கவும்
.மற்றொரு  கடாயில்  எண்ணெய்  விட்டு  தாளிக்க  வேண்டிய  பொருட்களை  தாளித்து  தண்ணீர்  விட்டு  நன்றாக  கொதித்த  பின் உப்பு,தேங்காய்   சேர்த்து.

   வறுத்து  வைத்துள்ள  அரிசி  பொடியை  போட்டு   கிளறி  20 நிமிடங்கள்  மூடி  வைக்கவும்
. பிறகு   இலையில்  எண்ணெய்  தடவி  வேக வைத்துள்ள  மாவை  வட்டமாக  தட்டி  இட்லி  தட்டில்  வைத்து

 குக்கரில்  20 நிமிடங்கள்  ஆவியல்  வைத்து  இறக்கி  பரிமாறவும் 


பின் குறிப்பு 

      அரிசியை  ஊர  வைக்காமல்  நெய்சாகா  மிக்ஸ்யில்  பொடித்தும்  செய்யலாம் .
தேவைபட்டாள்  தண்ணீர்  சேர்த்து  கொள்ளவும் .

Saturday, 23 February 2013

உருளை கிழங்கு போண்டா (potato masala balls)


உருளை  கிழங்கு  போண்டா 




                   தேவையான  பொருட்கள் 


  •  உருளை  கிழங்கு -2 பெரியது 
  •  வெங்காயம் -2 (பொடியாக  நறுக்கியது )
  •  பச்சை மிளகாய் -3
  •  இஞ்சி -1/2ஸ்பூன் 
  •  கறிவேப்பிலை -5
  •  கொத்தமல்லி தழை -2ஸ்பூன்  
  •  ஆயில் -தேவையான அளவு 
  •  கடுகு -1/2ஸ்பூன் 
  •  உப்பு -தேவையான அளவு 

கரைக்க  தேவையான பொருட்கள் 

  •  கடலை  மாவு -11/2டம்ளர் 
  •  அரிசி மாவு  அல்லது  கார்ன் ப்ளேவர்  மாவு -5ஸ்பூன் 
  •   மிளகாய் பொடி -3ஸ்பூன் 
  •  பெருங்காயம் -1ஸ்பூன் 
  •  தோசை  மாவு -1கரண்டி தேவையானால் 
  • உப்பு -தேவையான அளவு 
  • தண்ணீர் -1/2கப் 

செய்முறை 

உருளை கிழங்கை  வேகவைத்து  கொள்ளவும் .
 பின்  நன்றாக  உதிர்த்து  கொள்ளவும் 
.வெங்காயம் ,பச்சை மிளகாய் ,இஞ்சி ,கொத்தமல்லி ,கறிவேப்பிலை இவை  அனைத்தையும்  பொடியாக  நறுக்கவும்.
 .கடாயில்  ஆயில்  விட்டு  கடுகு தாளித்து  வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கறிவேப்பிலை ,கொத்தமல்லி ,இஞ்சி ,இவைகளை  3 நிமிடம்  வதக்கி  கொள்ளவும்.
 .பின்  வதக்கிய  பொருட்களை  சிறிய  உருண்டைகளாக  உருட்டி  கொள்ளவும்.
 . ஒரு  பேசனில்  கடலை மாவு ,அரிசிமாவு ,உப்பு ,பெருங்காயம் ,மிளகாய் பொடி  சேர்த்து  தண்ணீர்  விட்டு  கரைத்து  கொள்ளவும்.



 கடாயில்  ஆயில்  விட்டு உருட்டி  வைத்துள்ள  உருளை கிழங்கை  மாவில்  முக்கி  எண்ணெயில்  பொரித்து  எடுக்கவும் .








பின்  குறிப்பு  

 தண்ணீர்  அளவாக  விடவும் .இட்லி  மாவு  போல்  கரைத்து  கொள்ளவும் .

Friday, 22 February 2013

முட்டை கோஸ் மசால் வடை (cabbage masala vadai)


 முட்டை கோஸ்  மசால்  வடை 



                         தேவையான  பொருட்கள் 

  •  கடலை பருப்பு - 1கப் 
  •  துவரம் பருப்பு -3/4கப் 
  •  வற்றல் மிளகாய் 5
  •  கோஸ் -1/2கப் (பொடியாக  நறுக்கியது)
  •  வெங்காயம் -2
  •  பெருங்காயபொடி -1/2ஸ்பூன் 
  •  கறிவேப்பிலை,கொத்தமல்லி தழை -2ஸ்பூன்  
  •   உப்பு -தேவையான அளவு 
  •   ஆயில் -தேவையான அளவு 

செய்முறை

     வெங்காயம் ,கோஸ்  பொடியாக  நறுக்கி கொள்ளவும். 

       கடலை பருப்பு ,துவரம் பருப்பு ,வற்றல் மிளகாய் இவை  அனைத்தையும்  1 மணிநேரம்  ஊர வைக்கவும் 
பின் பருப்பு ,வற்றல் மிளகாய் ,உப்பு ,பெருங்காயம்  சேர்த்து  மிக்ஸ்யில்  போட்டு  கரகரப்பாக அரைத்து  கொள்ளவும்
.பிறகு அரைத்த  விழுதுடன்  கோஸ் ,வெங்காயம் ,கறிவேப்பிலை ,கொத்தமல்லி தழை சேர்த்து  பிசறவும்.




பின்  கடாயில்  ஆயில்  விட்டு வடைதட்டி  போட்டு  எடுக்கவும் .



                      

Thursday, 14 February 2013

பேபி கார்ன் ப்ரை (baby corn fry)

பேபி  கார்ன்  ப்ரை 




                             தேவையான  பொருட்கள் 

  •  பேபி கார்ன் -12
  •  சோளமாவு -1/2கப் 
  •  மைதாமாவு -1/4கப் 
  •  மிளகாய் பொடி -2-3ஸ்பூன் (காஷ்மீர் சில்லிபவுடர் )
  •  சில்லிசாஸ் -1ஸ்பூன் 
  •  சோயாசாஸ் -1ஸ்பூன் 
  •  இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன் 
  •  உப்பு -தேவையான அளவு 
  •  ஆயில் -தேவையான அளவு 

செய்முறை 

      பேபிகார்ன்னை  நீளமாக  நறுக்கவும்.
 .ஒரு  அகன்ற  பேசனில்  சோளமாவு ,மைதாமாவு ,மிளகாய் பொடி,சில்லி சாஸ் ,சோயாசாஸ் ,இஞ்சி பூண்டு விழுது ,உப்பு  சேர்த்து  தண்ணீர்  விட்டு  பஜ்ஜிமாவு  போல்  கரைத்து  கொள்ளவும்


.பின்  கடாயில்  ஆயில்  தேவையான  அளவு  விட்டு 
 பேபிகார்ன்னை  ஒன்றோன்றாக  எடுத்து  மாவில் முக்கி

  எண்ணெயில் பொரித்து  எடுக்கவும் .சுவையான  பேபிகார்ன்  ப்ரை  ரெடி