உருளை கிழங்கு போண்டா
தேவையான பொருட்கள்
- உருளை கிழங்கு -2 பெரியது
- வெங்காயம் -2 (பொடியாக நறுக்கியது )
- பச்சை மிளகாய் -3
- இஞ்சி -1/2ஸ்பூன்
- கறிவேப்பிலை -5
- கொத்தமல்லி தழை -2ஸ்பூன்
- ஆயில் -தேவையான அளவு
- கடுகு -1/2ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
கரைக்க தேவையான பொருட்கள்
- கடலை மாவு -11/2டம்ளர்
- அரிசி மாவு அல்லது கார்ன் ப்ளேவர் மாவு -5ஸ்பூன்
- மிளகாய் பொடி -3ஸ்பூன்
- பெருங்காயம் -1ஸ்பூன்
- தோசை மாவு -1கரண்டி தேவையானால்
- உப்பு -தேவையான அளவு
- தண்ணீர் -1/2கப்
செய்முறை
உருளை கிழங்கை வேகவைத்து கொள்ளவும் .
பின் நன்றாக உதிர்த்து கொள்ளவும்
.வெங்காயம் ,பச்சை மிளகாய் ,இஞ்சி ,கொத்தமல்லி ,கறிவேப்பிலை இவை அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.
.கடாயில் ஆயில் விட்டு கடுகு தாளித்து வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கறிவேப்பிலை ,கொத்தமல்லி ,இஞ்சி ,இவைகளை 3 நிமிடம் வதக்கி கொள்ளவும்.
.பின் வதக்கிய பொருட்களை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
. ஒரு பேசனில் கடலை மாவு ,அரிசிமாவு ,உப்பு ,பெருங்காயம் ,மிளகாய் பொடி சேர்த்து தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.
கடாயில் ஆயில் விட்டு உருட்டி வைத்துள்ள உருளை கிழங்கை மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும் .
No comments:
Post a Comment