முட்டை கோஸ் மசால் வடை
தேவையான பொருட்கள்
- கடலை பருப்பு - 1கப்
- துவரம் பருப்பு -3/4கப்
- வற்றல் மிளகாய் 5
- கோஸ் -1/2கப் (பொடியாக நறுக்கியது)
- வெங்காயம் -2
- பெருங்காயபொடி -1/2ஸ்பூன்
- கறிவேப்பிலை,கொத்தமல்லி தழை -2ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- ஆயில் -தேவையான அளவு
செய்முறை
வெங்காயம் ,கோஸ் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலை பருப்பு ,துவரம் பருப்பு ,வற்றல் மிளகாய் இவை அனைத்தையும் 1 மணிநேரம் ஊர வைக்கவும்
பின் பருப்பு ,வற்றல் மிளகாய் ,உப்பு ,பெருங்காயம் சேர்த்து மிக்ஸ்யில் போட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும்
.பிறகு அரைத்த விழுதுடன் கோஸ் ,வெங்காயம் ,கறிவேப்பிலை ,கொத்தமல்லி தழை சேர்த்து பிசறவும்.
No comments:
Post a Comment