Thursday, 21 February 2013

கோஸ் பருப்பு உசிலி (cabbage paruppu usili )


கோஸ் பருப்பு உசிலி (Cabbage paruppu usili)





            தேவையான  பொருட்கள் 

  • கோஸ் -1/2கிலோ
  • ஆயில் -2ஸ்பூன்
  •  பெருங்காய பொடி -1/2ஸ்பூன்  
  •  உப்பு - தேவையான அளவு 

ஊர  வைத்து  அரைக்க  தேவையான  பொருட்கள்  


  • துவரம் பருப்பு -1/2கப் 
  • கடலை பருப்பு -1/2கப் 
  • வற்றல் மிளகாய் -5
  • கறிவேப்பிலை -5

செய்முறை 

 கோஸை  2 டம்ளர்  தண்ணீர்  விட்டு  வேக வைத்து  கொள்ளவும் .துவரம் பருப்பு ,கடலை பருப்பு ,வற்றல் மிளகாய் ,கறிவேப்பிலை ,உப்பு  இவை  அனைத்தையும் 1/2 மணி நேரம்  ஊர  வைத்து.

  மிக்ஸ்யில்  அரைத்து  கொள்ளவும்.

பிறகு  அரைத்த  விழுதை  இட்லி  தட்டில்  வைத்து.
  குக்கரில்  ஆவியில்  15 நிமிடங்கள்  வைத்து  எடுத்து  உதிர்த்து  கொள்ளவும்
 .பின் கடாயில்  ஆயில்  விட்டு  கடுகு ,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை  சேர்த்து  தாளிக்கவும்
 .பின் வேக  வைத்துள்ள பருப்பு  கலவையை  சேர்த்து  1 நிமிடம்  வதக்கிய  பின்
  கோஸை சேர்த்து  2 நிமிடம் வதக்கி வைத்து  பரிமாறவும் .




பின்  குறிப்பு 

 மோர்  குழம்பிற்கு  தொட்டு  கொள்ள  மிகவும்  சுவையான  காய் 

No comments:

Post a Comment