Thursday, 21 February 2013

சாம்பார் சாதம் / SAMBAR RICE

சாம்பார்  சாதம்  SAMBAR RICE (பிஸி பேலா பாத் )


                  தேவையான  பொருட்கள் 


  • அரிசி -1கப் 
  • சின்ன  வெங்காயம் -50கிராம் 
  • தக்காளி -2
  • பெரிய வெங்காயம் -1
  • கேரட் -2
  • நிலகடலை -3ஸ்பூன் 
  • புளி -எலும்பிச்சை பழ அளவு 
  • பீன்ஸ் -6
  • ஆயில் -2ஸ்பூன் 
  • நெய் -2ஸ்பூன் 
  • துவரம்  பருப்பு 1/2கப் 
  • மஞ்சள் பொடி -1/4ஸ்பூன் 
  • தண்ணீர் -4கப் 
  • உப்பு -தேவையான அளவு 
  •                         

                     

              வறுத்து  அரைக்க  தேவையான  பொருட்கள் 


  •    தேங்காய் துருவல் -1/2கப் 
  •    தனியா -2ஸ்பூன் 
  •    உளுத்தம் பருப்பு -1ஸ்பூன் 
  •    வெந்தயம் -3/4ஸ்பூன் 
  •    கடலை பருப்பு 1/2ஸ்பூன் 
  •    வற்றல் மிளகாய் -5
  •    கறிவேப்பிலை -5இதழ்கள் 

தாளிக்க  தேவையான பொருட்கள் 


  • கடுகு -1/2ஸ்பூன் 
  • உளுத்தம் பருப்பு -3/4ஸ்பூன் 
  • கறிவேப்பிலை -5

செய்முறை 

வதக்க  வேண்டிய  பொருட்களை ஆயில்  விட்டு  சிவக்க  வதக்கி  மிக்ஸ்யில்  அரைத்து  கொள்ளவும் .




 புளியை  1டம்ளர்  தண்ணீரில் 1/2 மணி நேரம்  ஊர  வைக்கவும்.
 காய்கறிகளை நீள  வாக்கில்  நறுக்கி  கொள்ளவும்

  கடாயில்  ஆயில்  விட்டு  கடுகு ,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை தாளித்து   வெங்காயம் ,காய்கறிகள் ,தக்காளி நிலகடலை  இவை  அனைத்தையும்  வதக்கி  கொள்ளவும்


.பிறகு குக்கரில்  புளி  தண்ணீரை  விட்டு துவரம் பருப்பு ,   அரிசியையும்  சேர்த்து  உப்பு ,மஞ்சள் பொடி  போட்டு  வதக்கிய  காய்கறி  மற்றும் அரைத்த  விழுதை  சேர்த்து.



  குக்கரில்  வைத்து  8-9 விசில்  விடவும் .பின்  இறக்கி  வைத்து  கொத்தமல்லி  தழை தூவி   நெய்யை  ஊற்றி பரிமாறவும் .



பின் குறிப்பு 

 தேவையானால்  பட்டை,கிராம்பு ,பொடி,முந்திரி   சேர்க்கலாம் 
                  

No comments:

Post a Comment