Wednesday, 20 March 2013

அரிசி உப்புமா (arisi /rice upma)


அரிசி  உப்புமா 


                    தேவையான  பொருட்கள் 

  • அரிசி -2கப் (பச்சரிசி அல்லது புழுங்கல்  அரிசி )
  • துவரம் பருப்பு -2ஸ்பூன் 
  • மிளகு -1/2ஸ்பூன் 
  • சீரகம் -1/2ஸ்பூன் 
  • வரமிளகாய் -2
  • தேங்காய் -1/2கப் (துருவியது )
  • தண்ணீர் -3கப் 

 தாளிக்க  தேவையான  பொருட்கள் 

  •     கடுகு -1/2ஸ்பூன் 
  •     உளுத்தம் பருப்பு -1/2ஸ்பூன் 
  •     பெருங்கயபொடி -1/2ஸ்பூன் 
  •     ஆயில் -2ஸ்பூன் 
  •     கறிவேப்பிலை -7
  •     தேங்காய் எண்ணெய் அல்லது  நெய்  -2ஸ்பூன் 

செய்முறை 

 அரிசி ,பருப்பு ,வரமிளகாய் ,சீரகம் ,மிளகு  இவை  அனைத்தையும் தண்ணீர்  விட்டு  1/2 மணி நேரம்  ஊர  வைத்து  கொள்ளவும்.
 ஒரு  காட்டன்  துணியில்  ஊர  வைத்த  பொருட்களை  போட்டு  நன்றாக  காய  வைக்கவும்
. பிறகு  மிக்ஸ்யில்  போட்டு  பொடித்து  கொள்ளவும்
. பின்  குக்கரில்  ஆயில்  விட்டு  தாளிக்க  வேண்டியதை  தாளித்து
  தண்ணீர்  விடவும்.தண்ணீர்  நன்றாக  கொதித்த  பிறகு
  பொடித்து  வைத்துள்ள  அரிசி  பொடி ,தேங்காய் துருவல் ,உப்பு  சேர்த்து  கிளறி  

குக்கரை சிறியதாக  வைத்து   மூடி  3 விசில்  விட்டு  எடுக்கவும் .பரிமாறும்  முன்  நெய்யை  மேலாக  விட்டு  பரிமாறவும்.


No comments:

Post a Comment