கீரை சுண்டல்
தேவையான பொருட்கள்
சிவப்பு கீரை -1கப் (பொடியாக நறுக்கியது )
தண்ணீர் -1/2கப்
உப்பு -தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
கடுகு -1/2ஸ்பூன்
உளுத்தம் பருப்பு -3/4ஸ்பூன்
கறிவேப்பிலை -5
வறுத்து பொடிக்க தேவையான பொருட்கள்
பச்சரிசி -3ஸ்பூன்
வரமிளகாய் -2
செய்முறை
கீரையை பொடியாக நறுக்கி நன்றாக கழுவி கொள்ளவும்
.கடாயில் தண்ணீர் விட்டு கீரையை போட்டு 15-20 நிமிடங்கள் வேக விடவும்..பிறகு மற்றொரு கடாயில் வறுக்க வேண்டிய பொருட்களை சிவக்க வறுத்து கொள்ளவும்
.பின் கடாயில் ஆயில் விட்டு கடுகு ,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து
வேக வைத்துள்ள கீரையை சேர்த்து பொடித்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து நன்றாக கிளறவும்
.10 நிமிடங்கள் கிளறிய பின் இறக்கிவைத்து பரிமாறவும்.
No comments:
Post a Comment