சேமியா புலாவ்
தேவையான பொருட்கள்
- சேமியா -1கப்
- தண்ணீர் -2கப்
- பீன்ஸ் -7
- கேரட் -2
- பெரிய வெங்காயம் -2
- தக்காளி -1
- பட்டாணி -3/4கப்
- தனியா பொடி -1/2ஸ்பூன்
- கரம் மசாலா பொடி -1/2ஸ்பூன்
- பச்சை மிளகாய் -2
- முந்திரி -5
- இஞ்சி பூண்டு விழுது -1/2ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- ஆயில் -2ஸ்பூன்
- கொத்தமல்லி தழை -2ஸ்பூன் (பொடியாக நறுக்கியது )
செய்முறை
காய்கறிகளை நீளமாக நறுக்கி கொள்ளவும் .
சேமியாவை -கடாயில் போட்டு 5நிமிடங்கள் வறுத்து எடுக்கவும்
.பின் கடாயில் தண்ணீர் விட்டு கொதித்தவுடன் சேமியாவை போட்டு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வேக விடவும்
.வெந்த சேமியாவை வடிகட்டி பச்சை தண்ணீரில் நன்றாக கழுவவும்
.பிறகு கடாயில் ஆயில் விட்டு இஞ்சி பூண்டு விழுதை போட்டு 1நிமிடம் வதக்கிய பிறகு வெங்காயம் ,முந்திரி ,பச்சை மிளகாய் போட்டு 5நிமிடம் வதக்கிய பின்
பீன்ஸ் ,கேரட் சேர்த்து மேலும் 7 நிமிடங்கள் வதக்கி தனியா பொடி ,கரம் மசாலா பொடி ,உப்பு சேர்த்து 2நிமிடங்கள் வதக்கவும்.பின் வெந்த சேமியாவை சேர்த்து
கலக்கி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
No comments:
Post a Comment