கேரளா மாம்பழம் மோர் குழம்பு
தேவையான பொருட்கள்
- மாம்பழம் -2
- கறிவேப்பிலை -4
- மஞ்சள் பொடி -1/2ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- மோர் -1/2கப் (கடைந்த கட்டியான மோர் )
அரைக்க தேவையான பொருட்கள்
- தேங்காய் துருவல் -1கப்
- வரமிளகாய் -5
தாளிக்க தேவையான பொருட்கள்
- தேங்காய்எண்ணெய் -1ஸ்பூன்
- கடுகு -1/2ஸ்பூன்
- வெந்தயம்-1/4ஸ்பூன்
- கறிவேப்பிலை -5
செய்முறை
மாம்பழத்தை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
.ஒரு அகன்ற பாத்திரத்தில் மாம்பழம் ,மாம்பழகொட்டை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மஞ்சள் பொடி ,உப்பு, கறிவேப்பிலை சேர்த்து 25 நிமிடங்கள் கொதிக்க விடவும்
.பிறகு அரைக்க வேண்டியபொருட்களை தண்ணீர் விட்டு மிக்ஸ்யில் அரைத்து கொள்ளவும்
.பின் வெந்த மாம்பழத்துடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும்
. பின் மோரை விட்டு
ஒரு நுரை வந்தவுடன் இறக்கி வைத்து தாளித்து கொட்டி பரிமாறவும்
No comments:
Post a Comment