Saturday, 8 December 2012

Mysurpa

வலை தளத்தில் இது தான்  என்னுடைய முதல் முயற்சி, முதலில் இனிப்பாக ஆரம்பிக்கலாமே என்று தான் மைசூர் பாகில் துவங்க நினைத்தேன்.  மைசூர் பாகு  இனிப்புகளின் துவக்கம், நாவில் பட்டால் கரைகின்ற மைசூர் ப்பாகை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம். மைசூர் பாகில் ஆரம்பித்து மிக பெரிய இனிப்பு சாம்பிராஜியத்தை நிறுவிய கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சே இதற்கு நல்ல உதாரணம். அனைவருக்கும் பிடித்தமான மைசூர் பாகு இதோ ....

தேவையான பொருட்கள்:
வெண்ணெய் -  600 gm 
கடலை மாவு  - 250 gm 
சர்க்கரை         -  1 கிலோ 

முதலில் ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் வெண்ணையை உருக்கி அதில் முக்கால் பங்கு எடுத்து வடிகட்டி  அதில் கடலை மாவை கலந்து வைக்கவும். அடுத்தது அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். சர்க்கரை கரைந்து ஒரு கொதி வந்தவுடன் நெய்யில் கலந்த கடலை மாவை அதில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 30 நிமிடங்கள் கிளறிக்கொண்டே இருக்கவும், மீதம் இருக்கும் நெய்யை சிறிது சிறிதாக விட்டு கிளறவும். 
            பதம் (கிளரும் போது பத்திரத்தில் ஒட்டாமல் வந்தால்) வந்தவுடன் ஒரு பெரிய தட்டில் நெய் தடவி அதில் மைசூர் பாகை கொட்டி ஆற வைக்கவும், 3 நிமிடங்கள் ஆறிய வுடன் சிறிய அளவு பீஸ்களாக வெட்டி வைக்கவும். இதோ வாயில் போட்டால் கரைந்து விடும் சூப்பர் மைசூர்  பாகு தயார்.

பி.கு : சர்க்கரையில் விடும் தண்ணீர் (200-250 ml ) அளவு மிகவும் முக்கியம்.
           கடலை மாவை வறுக்க வேண்டாம், மாவை சூடான  நெயில் போட்டு வைப்பதால் பச்சை வாசனை வராது.
           சிம்மில் வைத்து கிளறவும் அப்போது தான்  நல்ல நிறம் கிடைக்கும்  
                    

1 comment: