அசோகா அல்வா
அசோகா அல்வா என்பது பாசி பருப்பு வைத்து செய்யும் ஒரு இனிப்பு வகை, இதை பொதுவாக டால்டா அல்லது ஆயில் உபயோகித்து தான் செய்வார்கள், அபோது தான் அதற்கு தனியான சுவையும், மிருதுவான தன்மையும் கிடைக்கும். நம்மில் பலருக்கு டால்டா சேர்த்தால் ஜீரணமாகாது ஆகையால் இதில் நெய் உபயோகித்து செய்துள்ளேன். பாசிப்பருப்புடன் நெய் கலந்து செய்யப்படுவதால் இது குழந்தைகளுக்கு ஆரோகியமான உணவாகும். கல்யாண பந்திகளில் காலை டிபனுடன் இதை காணலாம். மிகவும் ருசியான அசோகா அல்வா செய்முறை விளக்கம் இதோ...
தேவையானவை:
- பாசி பருப்பு - 1 கப்
- சர்க்கரை - 1+1/2 கப்
- கோதுமைமாவு - 1/4 கப்
- தண்ணீர் - 2+1/2 கப்
- நெய் - 2 கப்
- முந்திரி - தேவைக்கேற்ப
- கும்குமப்பூ - சிறிதளவு
- ஏலக்காய் பொடி - சிறிதளவு
செய்முறை
பாசிப் பருப்பை லேசாக வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும் பிறகு குக்கரில் நன்றாக குழைய வேக வைக்கவும்.
வேகவைத்த பருப்புடன் சர்க்கரை கலந்து வாணலியில் போட்டு கிளறவும், நெய்யில் கோதுமை மாவை சிவக்க வாசனை வரும் வரை வறுத்து அதை தண்ணீரில் கரைத்து (சிறிது கெட்டியாக), கிளறிக்கொண்டிருக்கும் கலவையுடன் சேர்த்து, அடுப்பை சிறியதாக வைத்து 30 நிமிடங்கள் நன்றாக கிளறவும்,
இடையில் கும்குமப்பூ சேர்த்துக்கொள்ளவும். நிறம் வேண்டுமென்றால் கேசரி பவுடர் சேர்த்துக் கொள்ளலாம் அல்வா நன்றாக சுருண்டு வந்தவுடன் ஏலக்கைப்போடியை தூவி, நெயில் வருத்த முந்திரியை சேர்த்து இறக்கி வைக்கவும்.
பி.கு : அனைத்து இனிப்பு வகைகளுக்கும் ஆவின் அல்லது நில்கிரிஸ் போன்ற தரமான வெண்ணை கொண்டு வீட்டில் காய்ச்சிய நெய்யை உபயோகபடுத்தினால் நல்ல ருசி கிடைக்கும்.
No comments:
Post a Comment