Sunday, 24 February 2013

ரவா தோசை (RAVA DOSA)


 ரவா  தோசை  

                        தேவையான  பொருட்கள் 

 
  •   ரவை -2கப்  (வெள்ளை  ரவை )
  •  அரிசி  மாவு -2கப் 
  •  கோதுமை மாவு -3ஸ்பூன் 
  •  பச்சை மிளகாய் -4
  • இஞ்சி -2ஸ்பூன் 
  • மிளகு -1ஸ்பூன் 
  • சீரகம் -1ஸ்பூன் 
  • பெருங்கயபொடி -1ஸ்பூன் 
  • கறிவேப்பிலை -7
  • கொத்தமல்லி தழை -2ஸ்பூன் 
  • முந்திரி - 10
  • உப்பு  -தேவையான-அளவு 
  • ஆயில் -தேவையான அளவு 

  செய்முறை 

ரவை ,அரிசி பொடி ,கோதுமை பொடி ,உப்பு  இவை  அனைத்தையும்   தண்ணீர்  விட்டு  கரைத்து  கொள்ளவும்

 .பின்  கடாயில்  எண்ணெய்  விட்டு  கடுகு ,மிளகு ,சீரகம் ,பச்சை மிளகாய் ,கறிவேப்பிலை ,கொத்தமல்லி தழை  தாளித்து  கொள்ளவும் . தாளித்த  பொருட்களை  கரைத்து  வைத்துள்ள  பொருட்களுடன்  சேர்த்து  நன்றாக  கிளறவும் .தேவையானால்  தண்ணீர்  விட்டு  கொள்ளவும்.
 .இந்த  கரைத்த  மாவை 1/2 மணி நேரத்திற்கு  பிறகு  அடுப்பில்  தோசை  கல்லை  போட்டு  கரண்டியில்  மாவை  எடுத்து  சுற்றி  தோசை  சுட்டால்  மொரு  மொரு  ரவா தோசை  ரெடி .

 பின்  குறிப்பி  

     ரவா  தோசைக்கு  மாவை தண்ணீராக  கரைத்து  கொள்ளவும் .
     இதற்கு  தொட்டு  கொள்ள  புதினா  சட்னி  சுவையாக  இருக்கும் 
   

No comments:

Post a Comment