Wednesday, 3 April 2013

பிரென்ச் ப்ரை ( CRISPY FRENCH FRY) home made


பிரென்சு  ப்ரை 


                        தேவையான பொருட்கள் 

  • உருளை கிழங்கு -3
  • தண்ணீர் -தேவையான அளவு 
  • உப்பு -தேவையான அளவு 
  • கருப்பு மிளகு பொடி -தேவையான அளவு 
  • ஆயில் -பொரிபதற்கு தேவையான அளவு 

செய்முறை 

      உருளை கிழங்கை  தோல்  சீவி  நீளமாக நறுக்கி  கொள்ளவும்.

       ஒரு  பாத்திரத்தில்  தண்ணீர்  விட்டு   நன்றாக கொதித்த  பிறகு உப்பு  சேர்த்து  நறுக்கி  வைத்துள்ள  உருளைகிழங்கை  போட்டு  20 நிமிடங்கள்  மூடி  வைக்கவும்.
 உருளை கிழங்கு  அரை  வேக்காடாக வெந்தால்  போதும்.வெந்த உருளைகிழங்கை  வடிகட்டி 


 ஒரு  காட்டன்  துணியில்  போட்டு  அது  நன்றாக  தண்ணீரை  உரிஞ்சிய  பிறகு  அதை  ஒரு  கட்டியான  கவரில்  போட்டு  ப்ரீசரில்  3 மணிநேரம்  வைக்கவும்.




பின்  அடுப்பில்  கடாயை  வைத்து  ஆயில்  விடவும். 
ப்ரீசரில்  வைத்துள்ள  உருளை கிழங்கை  எடுத்து
  ஆயில்  காய்ந்த  பின்  கொஞ்ச  கொஞ்சமாகபோட்டு  பொன்னிறமாக   பொரித்து  எடுக்கவும்.
 பின்  தட்டில்  வைத்து  மேலாக  மிளகு பொடி
 சேர்த்து  தக்காளி  சாஸ்சுடன்  பரிமாறவும்.

No comments:

Post a Comment