Monday, 25 March 2013

வெஜிடேபிள் பிரியாணி (vegetable biryani)


வெஜிடேபிள்  பிரியாணி 




               தேவையான  பொருட்கள் 

  •  பாஸ்மதி  ரைஸ் -2கப் 
  • முந்திரி பருப்பு -7
  • பெரிய வெங்காயம் -3
  • தக்காளி -1
  • கேரட் -2
  • பீன்ஸ் -6
  • பச்சை பட்டாணி -1/4
  • பச்சை மிளகாய் -1
  • உருளை கிழங்கு -1
  • பிரியாணி இழை -1/2
  • புதினா இழை -5
  • கொத்தமல்லி தழை -1/4கப் 
  • கரம் மசாலா பொடி -1ஸ்பூன் 
  • பிரியாணி  மசாலா பொடி -1ஸ்பூன் 
  • நெய் -3ஸ்பூன் 
  • ஆயில் -2ஸ்பூன் 
  • தனியா பொடி -1/2ஸ்பூன் 
  • மஞ்சள் பொடி -1/4ஸ்பூன் 
  • மிளகாய் பொடி-11/2ஸ்பூன் 
  • தண்ணீர் -31/2 கப் 

அரைக்க  தேவையான  பொருட்கள் 


  •  சின்ன  வெங்காயம் -5
  •   இஞ்சி -ஒரு துண்டு 
  •   பூண்டு -3 பல் 

செய்முறை 

     முதலில்  வெங்காயம் ,காய்கறிகளை  நீளமாக  நறுக்கி  கொள்ளவும்.


       அரிசியை  10 நிமிடங்கள்  ஊர  வைத்து  கொள்ளவும் 
.பின்  அரைக்க  கொடுத்துள்ளதை  மிக்ஸ்யில்  அரைத்து  கொள்ளவும்.

.குக்கரில்  நெய்,  ஆயில்  இரண்டையும்  சேர்த்து  விட்டு  காய்ந்தவுடன்  சீரகம்,புதினா ,கொத்தமல்லி தழை ,முந்திரி,பிரியாணி  இழை ,பச்சை மிளகாய்  தாளித்து
  வெங்காயத்தை  போட்டு  7 நிமிடம்  வதக்கவும்
.பிறகு  அரைத்த விழுதை  சேர்த்து  2 நிமிடம்  வதக்கி  தக்காளி ,பட்டாணி  காய்கறிகளை  சேர்த்து  5 நிமிடம்  வதக்கவும்.




 பிறகு மஞ்சள்பொடி ,மிளகாய் பொடி ,தனியா பொடி சேர்த்து  
  
  அரிசியை  சேர்த்து  2 நிமிடம் வதக்கிய  பிறகு



  தண்ணீர்  சேர்த்து  குக்கரை  மூடி  வைத்து  ஒரு  டம்ளரை  போட்டு  25 நிமிடங்கள்  மூடி  வைக்கவும்



.வெந்தவுடன்  கொத்தமல்லி தழை  தூவி  பரிமாறவும்.


பின்  குறிப்பு 

  இதற்கு  தொட்டு கொள்ள  தயிர்வெங்காயம்  சுவையாக  இருக்கும் .

No comments:

Post a Comment