தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு -1கப்
- காய்கறி - முள்ளங்கி
- புளி - ஒரு சிறிய உருண்டை (சிறிய எலும்பிச்சை பழ அளவு )
- சாம்பார் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் பொடி -1/2ஸ்பூன்
- பெருங்காயம் - 1/2ஸ்பூன்
- கறிவேப்பிலை - 5இதழ்கள்
- உப்பு - தேவையான அளவு
- தாளிக்க தேவையான பொருட்கள்
- ஆயில் -1/2ஸ்பூன்
- கடுகு - 1/2ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/4ஸ்பூன்
- கறிவேப்பிலை - 3இதழ்கள்
- கொத்தமல்லி தழை -1ஸ்பூன்
செய்முறை
புளியை 1/2மணிநேரம் 2 டம்ளர் தண்ணீரில் ஊர வைக்கவும்.
துவரம் பருப்பை 21/2 டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் 5 விசில் வரும் வரை அடுப்பில் வைத்து இறக்கவும்
ஒரு கடாயில் புளி தண்ணீரை விட்டு அதில் காய் , உப்பு ,மஞ்சள் பொடி ,பெருங்காயம் ,கறிவேப்பிலை அனைத்தையும் போட்டு அடுப்பில் வைத்து சுமார் 20-25 நிமிடங்கள் நன்றாக கொதித்த பின்
வெந்த பருப்பை போட்டு 10 நிமிடங்கள் கொதித்த பிறகு இறக்கி வைத்து எண்ணெயில் கடுகு ,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை கொத்தமல்லிதழை சேர்த்து தாளித்து பரிமாறவும் .
பின் குறிப்பு
முள்ளங்கிக்கு பதில் முருங்கை , வெண்டைக்காய் ,கத்திரிக்காய் ,குடை மிளகாய் .இவை அனைத்தும் சேர்த்து சாம்பார் செய்யலாம்
No comments:
Post a Comment