Sunday, 27 January 2013

பாசிபருப்பு கடலை பருப்பு பாயசம் (Moon dal Bengal gram Payasam)



பாசிபருப்பு கடலை  பருப்பு   பாயசம் (Moon dal Bengal gram Payasam)




 தேவையான  பொருட்கள் 
  •        பாசிபருப்பு- ½ கப் 
  •        கடலைபருப்பு- 2 tsp 
  •        பாகுவெல்லம்- ½ கப் 
  •        தேங்காய்பால்- ½ கப் 
  •       முந்திரி திராட்சை- தலா- ½ tsp 
  •       தேங்காய்-பொடியாகநறுக்கியது- 2 tsp 
  •        நெய்- 2 tsp 
  •        தேங்காய் -பொடியாக  நறுக்கியது- 2 tsp 


செய்முறை  





                 பாசிபருப்பு ,கடலைபருப்பு  இரண்டையும் தண்ணீர்  விட்டு  குக்கரில் 4 விசில் வரும் வரை அடுப்பில்  வைத்து  இறக்கவும்







ஒரு  கடாயை  அடுப்பில்  வைத்து  1 டம்ளர்  தண்ணீர்  விட்டு  வெல்லத்தை  போடவும்.
 வெல்லம்  நன்றாக  கரைந்த  பிறகு வெந்த  பருப்பை  போட்டு  5-7 நிமிடங்கள்  கொதிக்க  வைக்கவும்.






பிறகு தேங்காய் பாலை  விட்டு  5 நிமிடங்கள்  கொதித்த  பிறகு இறக்கி   வைக்கவும்.
  
பிறகு   பொடியாக  நறுக்கிய  தேங்காய் ,முந்திரியை  நெயில்  வறுத்து  பாயாசத்தில்  போடவும் .
கடைசியில்  ஏலக்காய் பொடியை  தூவவும்.

No comments:

Post a Comment