கேரளா மோர் குழம்பு (Kerala butter milk gravy)
தேவையான பொருட்கள்
- கடைந்த கட்டியான மோர் -1கப்
- வெண்டைக்காய் -5-6
- மஞ்சள் பொடி -1/2ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- கறிவேப்பிலை -3இதழ்கள்
- தண்ணீர் -2கப்
தாளிக்க தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய் -2ஸ்பூன்
- கடுகு 1/2ஸ்பூன்
- வெந்தயம் -3/4ஸ்பூன்
- கறிவேப்பிலை -3இதழ்கள்
அரைக்க தேவையான பொருட்கள்
- தேங்காய் துருவல் -1/2கப்
- பச்சை மிளகாய் -3-4
- சீரகம் -3/4ஸ்பூன்
செய்முறை
கடாயில் தண்ணீர் விட்டு மஞ்சள் பொடி,கறிவேப்பிலை போட்டு வெண்டைக்காயை சேர்த்து அடுப்பில் வைத்து 20-30நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்
.பிறகு அரைத்த பொருட்களை சேர்த்து
மேலும் 10 நிமிடங்கள் கொதித்த பின் மோரை விட்டு
ஒரு நுரை வந்தவுடன் அனைத்து தாளித்து கொட்டவும் .
பின் குறிப்பு
1.மோர் குழம்புக்கு சேர்க்கும் காய்கறிகள் :சேனை கிழங்கு ,சேப்பன் கிழங்கு ,பெங்களூர் கத்திரிக்காய் ,வாழைகாய்,பூசணிகாய் இவை அனைத்தும் சேர்த்து செய்யலாம்
2.மோர் குழம்பு கொதிக்க வேண்டாம் நுரை வந்தால் போதும்.கொதித்தால் தண்ணியாக போய்விடும்
3.பருப்பு பொடி சாதத்துக்கு தொட்டு கொள்ள மோர் குழம்பு சுவையாக இருக்கும்
No comments:
Post a Comment