நார்த்தங்காய் பச்சடி (Citron/Narthangai sweet and sour pachadi)
தேவையான பொருட்கள்
- நார்த்தங்காய் -6
- புளி -ஒரு சிறிய உருண்டை
- வெல்லம் -1/2கப்
- மஞ்சள் பொடி -3/4ஸ்பூன்
- பெருங்காயம் -1/2ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
- ஆயில் -1கரண்டி
- கடுகு -1/2ஸ்பூன்
- பச்சைமிளகாய் -3
- கறிவேப்பிலை இதழ் -5
செய்முறை
புளியை 1/2கப் தண்ணீரில் 1/2மணி நேரம் ஊற வைக்கவும்.
நார்தான்காயை பொடியாக நறுக்கவும்
.பின் குக்கரில் தண்ணீர் சேர்க்காமல் நறுக்கிய நார்த்தங்காயை 5-6 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும் .
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு ,பச்சை மிளகாய் ,கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும்
.பின் ஊற வைத்த புளி தண்ணீரை விட்டு 15 நிமிடங்கள் கொதிக்க விடவும்
.பின் வெல்லத்தை பொடி செய்து கொதிக்கும் புளியுடன் சேர்த்து
வெந்த நார்தாந்காயை போட்டு அதில் மஞ்சள் பொடி ,பெருங்காயம் ,உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும் .
பின் குறிப்பு
1.நார்தாங்காய் பச்சடி தயிர் சாதத்துக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும் .
2. நார்தாங்காய் வயிற்றுக்கு மிகவும் நல்லது
3.நார்தாங்காய் வாங்கும் போது காயாக இருந்தால் பச்சடி கசப்பாக இருக்கும்.
4.கொஞ்சம் பழுத்த காயாக வாங்கவும் .
5. பச்சடியை 20 நாட்கள் வரை fridge யில் வைத்து கொள்ளலாம்
No comments:
Post a Comment