Wednesday, 13 February 2013

ரவா இட்லி (rava idli)


ரவா இட்லி  


                 தேவையான  பொருட்கள் 

  •  ரவை -3கப் (வெள்ளை ரவை )
  •  தயிர் -3கப் 
  • கொத்தமல்லி தழை -5ஸ்பூன்
  • கேரட் -2(பொடியாக நறுக்கியது )                         

தாளிக்க  தேவையான  பொருட்கள் 

  •   நெய் -2ஸ்பூன் 
  •   கடுகு -1/2ஸ்பூன் 
  •   கடலை பருப்பு -1ஸ்பூன் 
  •   இஞ்சி -1ஸ்பூன் (பொடியாக நறுக்கியது )
  •  முந்திரி பருப்பு -10
  •   கறிவேப்பிலை -ஒரு கை பிடி  
  •   பச்சை மிளகாய் -3

செய்முறை 

        கடாயில்  நெய்  விட்டு  கடுகு ,கடலை பருப்பு ,கறிவேப்பிலை ,முந்திரி ,இஞ்சி ,பச்சை மிளகாய்  இவை  அனைத்தையும்  தாளிக்கவும்.
 .பிறகு  ரவையை  போட்டு  10 நிமிடங்கள் வறுக்கவும் .ரவை  சிவக்க  வறுக்க  வேண்டாம்.
.பின்  ரவை  ஆறிய பிறகு  தயிர் விட்டு ,கொத்தமல்லி தழை  போடவும் .  அதனுடன்  பொடியாக  நறுக்கிய  கேரட் ,உப்பு   சேர்த்து நன்றாக  கலக்கவும். 


தேவைபட்டாள்  தண்ணீர்  சேர்க்கவும். பிறகு  1/2மணி நேரத்திற்கு   பிறகு இட்லி  தட்டில்  மாவை  ஊற்றி
  குக்கரில்  15-20 வரை  ஆவியில்  வைத்து  எடுத்து  பரிமாறவும் 


பின்  குறிப்பு 

1. ரவா  இட்லிக்கு  தொட்டு  கொள்ள  தேங்காய் சட்னி  சுவையாக  இருக்கும் .
2.ரவையை  இட்லி  மாவு  போல் தயிர்  விட்டு  கரைக்கவும் 
3.தேவைபட்டாள்  தண்ணீர்  சேர்க்கலாம் 

No comments:

Post a Comment