Thursday, 28 February 2013

சன்னா மசாலா (chana masala recipe )


சன்னா  மசாலா  (chana masala recipe)


           தேவையான  பொருட்கள் 

  • கொண்டை கடலை -1கப் (சன்னா  தால் )
  • வெங்காயம் -3(பொடியாக  நறுக்கியது )
  • தக்காளி -3(பொடியாக  நறுக்கியது )
  • மஞ்சள்  பொடி -1/2ஸ்பூன் 
  • மிளகாய்  பொடி -1ஸ்பூன் 
  • சீரகம் பொடி -1/2ஸ்பூன் 
  • டீ பாக் -1(tea bag)
  • ஆயில் - 2ஸ்பூன் 
  • உப்பு - தேவையான  அளவு 
  •  

வறுத்து  அரைக்க  தேவையான  பொருட்கள் 

  •  கிராம்பு -1பீஸ் 
  •  வெள்ளை  மிளகு -5
  • தனியா -1ஸ்பூன் 
  • பச்சை மிளகாய் -2
  •  பிரெஞ்சி இலை -1
  • கருப்பு ஏலக்காய் -2


செய்முறை 

      கடலையை  7-8 மணிநேரம்  தண்ணீர்  விட்டு  ஊர வைக்கவும் 
.பின்  குக்கரில்  11/2 தண்ணீர், டீ  பாக் ,உப்பு  சேர்த்து    8-9 விசில்  விட்டு எடுக்கவும்.
கடாயில்  வறுக்கு  வேண்டிய  பொருட்களை  போட்டு  7 நிமிடங்கள்  வறுத்து  

பொடி செய்து  கொள்ளவும் . கடாயில்  எண்ணெய்  விட்டு  சீரகம்,  வெங்காயதை  போட்டு  10 நிமிடம்  வதக்கிய

 பிறகு  தக்காளியை  போட்டு  மேலும்  10 நிமிடம்  நன்றாக  வதக்கவும் 
.பிறகு  மஞ்சள் பொடி ,உப்பு ,மிளகாய் பொடி ,வறுத்து  பொடித்த  பொருட்கைலையும்  சேர்த்து  2 நிமிடம்  வதக்கி

  பின்  தண்ணீர் 1/2 டம்ளர்  விட்டு   வெந்த  கடலையை  போட்டு  10 நிமிடம்  கொதிக்க விடவும்


. கொத்தமல்லி  தழை  தூவி  பரிமாறவும்.

  பின் குறிப்பு 

 சப்பாத்தி ,பூரி ,குல்சா இவை  அனைத்துக்கும்  தொட்டு  கொள்ளலாம் .

No comments:

Post a Comment