Tuesday, 5 March 2013

தக்காளி தொக்கு (tomato thokku recipe)


தக்காளி தொக்கு 


                           தேவையான  பொருட்கள் 

  •  தக்காளி -10
  • வர மிளகாய்  பொடி -3ஸ்பூன் 
  • மஞ்சள் பொடி -1ஸ்பூன் 
  • தனியா பொடி -1ஸ்பூன் 
  • உப்பு-தேவையான  அளவு 

தாளிக்க  தேவையான  பொருட்கள் 

  •    நல்லெண்ணெய் -200 கிராம் 
  •     கடுகு -1/2ஸ்பூன் 
  •     கறிவேப்பிலை -8


செய்முறை 

                 தக்காளியை  பொடியாக  நறுக்கி  கொள்ளவும். கடாயில்  எண்ணெய்  விட்டு  கடுகு ,கறிவேப்பிலை  தாளித்து  நறுக்கிய  தக்காளியை  போட்டு  10 நிமிடம்  வதக்கவும் 

.பின்  மிளகாய் பொடி ,மஞ்சள் பொடி ,தனியாபொடி ,உப்பு  இவை  அனைத்தும்  போட்டு  20 நிமிடங்கள்  மூடி  வைக்கவும்
.பிறகு  மூடியை  எடுத்த  பிறகு  மீதி உள்ள  எண்ணையை  விட்டு  நன்றாக  கிளறி  இறக்கி  வைத்து  பரிமாறவும் .


பின்  குறிப்பு 

  தக்காளி  தொக்கை  7 நாட்கள்  வரை  fridge  வைத்து   கொள்ளலாம் .
 இட்லி ,தோசை ,சப்பாத்தி  இவை  அனைத்துக்கும்  தொட்டு  கொள்ளலாம் .

No comments:

Post a Comment