Tuesday, 15 January 2013

வெஜ் புலாவ் (Veg Pulav)

வெஜ்  புலாவ் (Veg Pulav)




வெஜ்  புலாவ் 
  •              பாஸ்மதி  ரைஸ்  - 2 கப் 
  •              இஞ்சி  பூண்டு விழுது - 1/2 ஸ்பூன் 
  •              பீன்ஸ்  - 100கிராம் 
  •              கேரட் - 50 கிராம் 
  •               வெங்காயம்  - 2 பெரியது 
  •                உருளை கிழங்கு - 2
  •                சீரகம் - 1/2 ஸ்பூன் 
  •                நெய் - 2ஸ்பூன் 
  •                 ஆயில் - 3ஸ்பூன் 
  •                  மிளகாய் தூள்  -   1/2ஸ்பூன் 
  •                 முந்திரி - 8- 9
  •                 உப்பு - தேவையான  அளவு 
  •                 பச்சை  மிளகாய் -2
  •                 தண்ணீர் - 2 டம்ளர் 
      செய்முறை 
         பாஸ்மதி  அரிசியை  10 நிமிடங்கள்  ஊற  வைக்கவும் .
 காய்கறிகளை  நீளமாக  நறுக்கி  கொள்ளவும் ,

            குக்கரில்   நெய்,  எண்ணெய்  விட்டு  சீரகத்தை போடவும், 









சீரகம்   பொரிந்தவுடன்  வெங்காயத்தை  போட்டு 10 நிமிடங்கள்  வதக்கிய பின், 
இஞ்சி  பூண்டு  விழுதை  போட்டு  1 நிமிடம்  வதக்கியவுடன்  பச்சை  மிளகாய் , முந்திரி , சேர்த்து  மேலும்  1 நிமிடம்  வதக்கவும் , பிறகு  காய்கறிகளை  போட்டு   5 நிமிடங்கள்  வதக்கி 
உப்பு  பாஸ்மதி  அரிசியை  போட்டு 2 நிமிடங்கள்  வதக்கி , 

 

 


 தண்ணீர்  விட்டு  ஒரு  கொதி  வந்தவுடன்  சுமார் (7நிமிடம்) கழித்து  குக்கரை  மூடி  வெயிட்  போட்டு  1 விசில்  வந்தவுடன்  அடுப்பை  15 நிமிடங்கள்  சிறியதாக  வைத்து  இறக்கவும் .

 கடைசில்  கொத்தமல்லி  தழை   தூவி  பரிமாறவும் .



                                          பின் குறிப்பு 
  . தேவைபட்டால்  ஆயில்  மேலும்  2 ஸ்பூன்  சேர்க்கலாம் 
   இதற்கு தொட்டு  கொள்ள   வெங்காய  ரைத்தா   சுவையாக  இருக்கும் .                                                

No comments:

Post a Comment