Wednesday, 26 December 2012

திருவாதிரை தாளகம் ( Thiruvadhirai Thalagam koottu) Recipe


திருவாதிரை  தாளகம் 

தேவையான  பொருட்கள்


பரங்கிக்காய்  - 200 கிராம்
காவத்து   கிழங்கு அல்லது (மரவள்ளி கிழங்கு )  -200 கிராம்
அவரைக்காய்  - 200 கிராம்
புளி                    - எலும்பிச்சை பழ அளவு 
தேங்காய்     -  1/2 கப் 


வறுத்து  அரைக்க   தேவையான  பொருட்கள்  

உளுத்தம் பருப்பு  - 2 ஸ்பூன்
கடலை  பருப்பு   -2 ஸ்பூன்
வற்றல் மிளகாய் - ஐந்து
தேங்காய் துருவல் -1/2 கப்
கறிவேப்பிலை  - சிறிது


செய்முறை   




                      

     
          முதலில் ஒரு  கடாயில்  கரைத்து வைத்த புளி தண்ணீரை விட்டு  நறுக்கிய  காய்கறிகளை  அதில்  போட்டு  உப்பு  மஞ்சள் பொடி  போட்டு வேக வைக்கவும். காய்கறி  நன்றாக  வெந்த பின்  வறுத்து  அரைத்த  பொருட்களை அதில் போட்டு 20 நிமிடங்கள்  கொதிக்க  விடவும்.




  நன்றாக கொதித்தவுடன் இறக்கி  வைக்கவும். பின்பு  கடுகு  உளுத்தம்  பருப்பு கறிவேப்பிலை  தாளித்து  கொட்டவும்.

    
                                               

  பின் குறிப்புவறுக்கும்  பொருட்களை  தேங்காய் எண்ணெயில்  வறுத்தால் நல்ல வாசனையாக  இருக்கும் தாளகத்தில் வாழைக்காய், சேனை கிழங்கு, சேம்பு ,கத்திரிக்காய் போன்ற  3,5, 7,  வகையான காய்களை சேர்த்தும் செய்யலாம்.

No comments:

Post a Comment