Thursday, 21 March 2013

ஆலு சப்பாத்தி (aloo stuffed chapathi)


ஆலு சப்பாத்தி 




  • கோதுமை  மாவு -2கப் 
  •  உருளை கிழங்கு -4
  •  உப்பு -தேவையான அளவு 
  •  மிளகாய் பொடி -2ஸ்பூன் 
  •  தனியா பொடி  -1/2ஸ்பூன் 
  • சீரக பொடி -1/2ஸ்பூன் 
  • நெய் -தேவையான அளவு 
  •  தண்ணீர் -தேவையான அளவு 


செய்முறை 

  கோதுமை மாவை  அளவாக  தண்ணீர்  விட்டு  மிசைந்து  கொள்ளவும்
.மிசைந்த  மாவு  1/2மணி நேரம்  ஊர  விடவும்.உருளை கிழங்கை  குக்கரில்  வேகவைத்து மசித்து    கொள்ளவும்.பின்  கடாயில்  நெய்  விட்டு  மசித்த  உருளை கிழங்கை  போட்டு  அதனுடன்  மிளகாய் பொடி ,தனியா பொடி ,உப்பு  சேர்த்து  10 நிமிடங்கள்  கிளறி  இறக்கவும்
.பிறகு  பிசைந்து  வைத்த  மாவை  உருண்டைகளாக்கி  கோதுமை மாவை  தொட்டு  சப்பாத்தி  கல்லில்  சிறியதாக  சப்பாத்தி  செய்து  அதன்  மேல்  உருளை  மசாலா  கலவையை  போட்டு 


 4 புறமும்  மூடி  மாவை  தொட்டு  பெரிய  வட்டமாக  சப்பாத்திகளாக  செய்யவும் .பின்  சப்பாத்தி  கல்லில்  ஒவ்வொன்றாக  போட்டு  எடுத்து


  நெய்  தடவி  சுட  சுட  பரிமாறவும்.


பின்  குறிப்பு 

 இதற்கு  தொட்டு கொள்ள  தயிர்  சுவையாக  இருக்கும் .

No comments:

Post a Comment