ரவா சேமியா கிச்சடி
தேவையான பொருட்கள்
- ரவை -1கப் 9வெள்ளை ரவை )
- சேமியா -1/4கப்
- நெய் -1ஸ்பூன்
- கேரட் -2(பொடியாக நறுக்கியது )
- பீன்ஸ் -7பொடியாக நறுக்கியது )
- பச்சை பட்டாணி -1/4கப்
- தக்காளி -1
- இஞ்சி -1/2ஸ்பூன் (பொடியாக நறுக்கியது )
- கொத்தமல்லி தழை -2ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- தண்ணீர் -2/12 கப்
தாளிக்க தேவையான பொருட்கள்
- ஆயில்-2ஸ்பூன்
- நெய் -3ஸ்பூன்
- கடுகு -1/4ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு -1/2ஸ்பூன்
- முந்திரி பருப்பு -8
- பச்சை மிளகாய் -3
- கறிவேப்பிலை -5
செய்முறை
கடாயில் நெய் 1 ஸ்பூன் விட்டு ரவையை போட்டு 5 நிமிடங்கள் வறுத்து எடுக்கவும்
.அதே கடாயில் சேமியாவையும் போட்டு 3 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்
.இந்த இரண்டையும் சேர்த்து ஒரு தட்டில் வைக்கவும் .கடாயில் மீதமுள்ள நெய் ,ஆயள் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு
முதலில் வெங்காயம் ,பச்சை மிளகாய் ,இஞ்சி சேர்த்து 3 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்
.பின் காய்கறிகளை ஒவ்வொன்றாக சேர்த்து 5 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்
.காய்கள் நன்றாக வதங்கிய பின் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
.தண்ணீர் கொதித்தவுடன் வறுத்து வைத்துள்ள ரவை , சேமியாவை சேர்த்து போட்டு கிளறி 25 நிமிடங்கள் மூடி வைக்கவும்
அடுப்பை சிறியதாக வைத்தே வேக விடவும்.தேவையானால் 2 ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ளலாம் .ரவை ,சேமியா நன்றாக வெந்த பின் இறக்கி வைத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும் .
பின் குறிப்பு
ரவை ,சேமியாவை மிகவும் சிவக்க வறுக்க வேண்டாம்
No comments:
Post a Comment