சன்னா மசாலா (chana masala recipe)
தேவையான பொருட்கள்
- கொண்டை கடலை -1கப் (சன்னா தால் )
- வெங்காயம் -3(பொடியாக நறுக்கியது )
- தக்காளி -3(பொடியாக நறுக்கியது )
- மஞ்சள் பொடி -1/2ஸ்பூன்
- மிளகாய் பொடி -1ஸ்பூன்
- சீரகம் பொடி -1/2ஸ்பூன்
- டீ பாக் -1(tea bag)
- ஆயில் - 2ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்
- கிராம்பு -1பீஸ்
- வெள்ளை மிளகு -5
- தனியா -1ஸ்பூன்
- பச்சை மிளகாய் -2
- பிரெஞ்சி இலை -1
- கருப்பு ஏலக்காய் -2
செய்முறை
கடலையை 7-8 மணிநேரம் தண்ணீர் விட்டு ஊர வைக்கவும்
.பின் குக்கரில் 11/2 தண்ணீர், டீ பாக் ,உப்பு சேர்த்து 8-9 விசில் விட்டு எடுக்கவும்.
கடாயில் வறுக்கு வேண்டிய பொருட்களை போட்டு 7 நிமிடங்கள் வறுத்து
பொடி செய்து கொள்ளவும் . கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், வெங்காயதை போட்டு 10 நிமிடம் வதக்கிய
பிறகு தக்காளியை போட்டு மேலும் 10 நிமிடம் நன்றாக வதக்கவும்
.பிறகு மஞ்சள் பொடி ,உப்பு ,மிளகாய் பொடி ,வறுத்து பொடித்த பொருட்கைலையும்
சேர்த்து 2 நிமிடம் வதக்கி
பின் தண்ணீர் 1/2 டம்ளர் விட்டு வெந்த கடலையை போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்
. கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
பின் குறிப்பு
சப்பாத்தி ,பூரி ,குல்சா இவை அனைத்துக்கும் தொட்டு கொள்ளலாம் .