Wednesday, 30 January 2013

குடைமிளகாய் சட்னி (capsicum chutney)

குடைமிளகாய்  சட்னி (Capsicum chutney) 




                            தேவையான  பொருட்கள் 
  •  குடைமிளகாய் -1
  • பெரிய வெங்காயம் -2
  • தக்காளி -2 சிறியது 
  • வற்றல் மிளகாய் -4
  • மஞ்சள் பொடி -1/2ஸ்பூன் 
  • உப்பு -தேவையான அளவு 
  • ஆயில் -11/2ஸ்பூன் 
   தாளிக்க  தேவையான  பொருட்கள் 
  •   கடுகு-ஸ்பூன் 
  •   ஆயில் -1/2ஸ்பூன் 
  •    கறிவேப்பிலை -3இதழ்கள் 
 செய்முறை 
                   வெங்காயம் ,குடைமிளகாய் ,தக்காளி இவை  அனைத்தையும்  நறுக்கி  கொள்ளவும் .கடாயில்  எண்ணெய்  விட்டு  வற்றல் மிளகாயை  முதலில்  போட்டு  1 நிமிடம்  வதக்கிய  பின்  

வெங்காயத்தை  சேர்த்து 2நிமிடங்கள்  வதக்கவும்.






பின்  குடைமிளகாய் ,தக்காளியை மஞ்சள் பொடி,பெருங்காயம் ,   சேர்த்து 7-10நிமிடங்கள்  நன்றாக  வதக்கவும் .
.பிறகு  உப்பு சேர்த்து  மிக்ஸ்யில் அரைத்து  எடுக்கவும் .அரைத்த  பின் கடுகு .கறிவேப்பிலை  தாளித்து  பரிமாறவும் .




    

வெஜி டேபிள் ஊத்தப்பம்(Vegetable Uthappam)

வெஜி டேபிள்  ஊத்தப்பம்(Vegetable Uthappam)






      தேவையான  பொருட்கள் 
  • இட்லி  அரிசி - 2கப் 
  • உளுத்தம் பருப்பு - 3/4
  • வெந்தயம் -1/2ஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 
   தேவையான  காய்கறிகள் 
  •     கேரட் -2
  •     குடைமிளகாய் -1
  •      தக்காளி -2
  •      வெங்காயம் -2 பெரியது 
  •     நல்லெண்ணெய் -தேவையான  அளவு

செய்முறை 




 அரிசி ,உளுத்தம்பருப்பு  இரண்டையும்  5-6 மணிநேரம்  ஊர  வைக்கவும் . பிறகு  மிக்ஸ்யில் அரிசி  பருப்பு ,வெந்தயம் ,உப்பு  சேர்த்து   நெய்சாக  அரைத்து  எடுக்கவும்.

.அரைத்த  மாவை 6-7 மணிநேரம்  வெளியில்  வைக்கவும் . காய்கறிகளை  தனித்தனியாக  பொடியாக  நறுக்கி கொள்ளவும்.

.தோசை  கல்லில்  மாவை  ஊத்தப்பாமாக  சுட்டு  அதில்  வெங்காயம் ,காய்கறிகளை  போட்டு  நல்லெண்ணை  விட்டு  இரு புறமும்  திருப்பி  போட்டு  எடுக்கவும் .சுவையான   வெஜிடேபிள்  ஊத்தப்பம்  ரெடி .


       பின் குறிப்பு 

      காய்கறிகளை  வதக்கியும்  சேர்க்கலாம். இதற்கு  தொட்டு கொள்ள   குடைமிளகாய்  சட்னி  சுவையாக  இருக்கும்  

Monday, 28 January 2013

பச்சரிசி கொழுக்கட்டை( Raw rice kozhukattai)


பச்சரிசி  கொழுக்கட்டை (Raw rice kozhukattai)


                                   

தேவையான  பொருட்கள்
  •   பச்சரிசி -2கப்
  •   மிளகு -1ஸ்பூன் 
  •  துவரம்பருப்பு -1/2ஸ்பூன் 
  •  சீரகம் - 1/2ஸ்பூன் 
  •  வற்றல்மிளகாய் -2
  •  ஆயில் -3ஸ்பூன் 
  •  கறிவேப்பிலை - 6இதழ்கள் 
  •  பெருங்காயம் -1ஸ்பூன் 
  •  உப்பு -தேவையானஅளவு 
  • கடுகு -1/2ஸ்பூன் 
  • உளுத்தம்பருப்பு -1/2ஸ்பூன் 
  • கடலைபருப்பு -1/2ஸ்பூன் 
  • தேங்காய்  துருவல் -1/2கப் 

            செய்முறை 
  பச்சரிசி ,மிளகு ,சீரகம் ,துவரம்பருப்பு  இவை  அனைத்தையும்  மிக்ஸ்யில்  பொடியாக  பொடித்து  கொள்ளவும் .
பிறகு  ஒருகடாயில்  ஆயில்  விட்டு  கடுகு ,உளுத்தம்பருப்பு ,கடலைபருப்பு ,கறிவேப்பிலை  தாளிக்கவும் .
தாளித்த  பிறகு  தண்ணீர்  விட்டு  7 நிமிடம்  தண்ணீர்  கொதித்த  பிறகு  பொடித்த  அரிசி  பொடி , தேங்காய்துருவல்  இரண்டையும்  போட்டு  15 நிமிடங்கள்  மூடி  வைக்கவும்


நன்றாக  வெந்த  பிறகு  உருண்டைகளாக  பிடித்து 


 குக்கரில்  ஆவியில்  7நிமிடங்கள்  வைத்து  எடுக்கவும் .சுவையான  அரிசி  கொழுக்கட்டை  ரெடி
  

  பின்குறிப்பு 
  இதற்கு  தொட்டு  கொள்ள  தேங்காய்சட்னி  சுவையாக  இருக்கும் .
                                   

Sunday, 27 January 2013

சின்ன வெங்காயம் சட்னி ( small onion chutney)

சின்ன வெங்காயம்  சட்னி ( small onion chutney)




  •      சின்ன வெங்காயம் - 1கப் 
  •      வற்றல்மிளகாய் - 4
  •      புளி - ஒரு சின்ன பீஸ்
  •     உளுத்தம்பருப்பு - 2ஸ்பூன் 
  •      உப்பு - தேவையான  அளவு
  •     ஆயில் - 2ஸ்பூன் 
  வெங்காயத்தை  தோல்  உரித்து  நன்றாக  கழுவவும் .


 ஒரு  கடாயில்  ஆயில்  விட்டு  சின்ன  வெங்காயம் ,வற்றல் மிளகாய் ,புளி , உளுத்தம்பருப்பு 
சேர்த்து  நன்றாக  வதக்கவும்


,( சுமார் 20-25நிமிடங்கள்) வதக்கிய  வெங்காயம் ,வற்றல் மிளகாய்,  புளி உப்பு  சேர்த்து  மிக்ஸ்யில்  அரைத்து  எடுக்கவும் .




              பின்  குறிப்பு 
                    வெங்காய  சட்டினி  இட்லி ,தோசை ,சப்பாத்தி  இவை அனைத்துக்கும்  தொட்டு  கொள்ள சுவையாக  இருக்கும் . 

துவரம் பருப்பு தோசை (TUR DAL DOSA)

துவரம்  பருப்பு  தோசை   (TUR DAL  DOSA)




                         


தேவையான  பெருட்கள் 
  •       இட்லி அரிசி -2 கப் 
  •       துவரம்  பருப்பு -1/2கப் 
  •       வற்றல் மிளகாய் - 2
  •       பெருங்காயம் -1/2ஸ்பூன் 
  •        உப்பு - தேவையான அளவு 
   
                                          தாளிக்க தேவையான  பொருட்கள் 
  •      ஆயில் -1ஸ்பூன் 
  •      கடுகு -1/2ஸ்பூன் 
  •      கறிவேப்பிலை -5இதழ்கள் 
  செய்முறை 

                 
அரிசி , பருப்பு ,வற்றல் மிளகாய் இவை  அனைத்தையும் 4-5மணி  நேரம் ஊர வைக்கவும் .பிறகு  மிக்ஸ்யில் ஊர வாய்த்த  அரிசி  பருப்புடன் பெருங்காயம் ,உப்பு ,வற்றல் மிளகாய் சேர்த்து  நன்றாக அரைத்து  எடுக்கவும்.

அரைத்த  மாவில்  கடுகு  கறிவேப்பிலை தாளிக்கவும் .  தோசை கல்லில் மாவை  விட்டு லேசாக  தோசை  சுட்டு  எடுக்கவும் .  

பின்  குறிப்பு 
   இதற்கு  தொட்டு  கொள்ள வெங்காய கார சட்னி , தயிர்  நன்றாக  இருக்கும் 

பொடிபோட்ட சாம்பார் (Simple and easy sambar for beginners)

பொடிபோட்ட   சாம்பார் 



                   தேவையான  பொருட்கள் 
  •              துவரம் பருப்பு -1கப் 
  •              காய்கறி - முள்ளங்கி
  •              புளி - ஒரு சிறிய  உருண்டை (சிறிய  எலும்பிச்சை பழ அளவு )
  •              சாம்பார்  பொடி - 2 டேபிள் ஸ்பூன் 
  •              மஞ்சள் பொடி -1/2ஸ்பூன் 
  •              பெருங்காயம் - 1/2ஸ்பூன் 
  •              கறிவேப்பிலை - 5இதழ்கள் 
  •              உப்பு  - தேவையான அளவு 
  •              தாளிக்க  தேவையான  பொருட்கள் 
  •              ஆயில் -1/2ஸ்பூன் 
  •              கடுகு - 1/2ஸ்பூன் 
  •              உளுத்தம் பருப்பு - 1/4ஸ்பூன் 
  •              கறிவேப்பிலை - 3இதழ்கள் 
  •              கொத்தமல்லி தழை -1ஸ்பூன்
 செய்முறை 
               புளியை  1/2மணிநேரம்  2 டம்ளர் தண்ணீரில்  ஊர வைக்கவும்.

 துவரம் பருப்பை  21/2 டம்ளர்  தண்ணீர்  விட்டு  குக்கரில் 5 விசில்  வரும் வரை  அடுப்பில்  வைத்து  இறக்கவும் 

 ஒரு  கடாயில்  புளி  தண்ணீரை  விட்டு  அதில்  காய் , உப்பு ,மஞ்சள் பொடி ,பெருங்காயம் ,கறிவேப்பிலை  அனைத்தையும்  போட்டு  அடுப்பில்  வைத்து  சுமார்  20-25 நிமிடங்கள்  நன்றாக  கொதித்த  பின்

  வெந்த  பருப்பை  போட்டு  10 நிமிடங்கள்  கொதித்த  பிறகு  இறக்கி  வைத்து  எண்ணெயில்  கடுகு ,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை கொத்தமல்லிதழை  சேர்த்து   தாளித்து  பரிமாறவும் .

   
 பின்  குறிப்பு 
              முள்ளங்கிக்கு  பதில்  முருங்கை , வெண்டைக்காய் ,கத்திரிக்காய் ,குடை  மிளகாய் .இவை  அனைத்தும்  சேர்த்து  சாம்பார்  செய்யலாம் 

பாசிபருப்பு கடலை பருப்பு பாயசம் (Moon dal Bengal gram Payasam)



பாசிபருப்பு கடலை  பருப்பு   பாயசம் (Moon dal Bengal gram Payasam)




 தேவையான  பொருட்கள் 
  •        பாசிபருப்பு- ½ கப் 
  •        கடலைபருப்பு- 2 tsp 
  •        பாகுவெல்லம்- ½ கப் 
  •        தேங்காய்பால்- ½ கப் 
  •       முந்திரி திராட்சை- தலா- ½ tsp 
  •       தேங்காய்-பொடியாகநறுக்கியது- 2 tsp 
  •        நெய்- 2 tsp 
  •        தேங்காய் -பொடியாக  நறுக்கியது- 2 tsp 


செய்முறை  





                 பாசிபருப்பு ,கடலைபருப்பு  இரண்டையும் தண்ணீர்  விட்டு  குக்கரில் 4 விசில் வரும் வரை அடுப்பில்  வைத்து  இறக்கவும்







ஒரு  கடாயை  அடுப்பில்  வைத்து  1 டம்ளர்  தண்ணீர்  விட்டு  வெல்லத்தை  போடவும்.
 வெல்லம்  நன்றாக  கரைந்த  பிறகு வெந்த  பருப்பை  போட்டு  5-7 நிமிடங்கள்  கொதிக்க  வைக்கவும்.






பிறகு தேங்காய் பாலை  விட்டு  5 நிமிடங்கள்  கொதித்த  பிறகு இறக்கி   வைக்கவும்.
  
பிறகு   பொடியாக  நறுக்கிய  தேங்காய் ,முந்திரியை  நெயில்  வறுத்து  பாயாசத்தில்  போடவும் .
கடைசியில்  ஏலக்காய் பொடியை  தூவவும்.