Sunday, 17 February 2013

அவுல் வெஜிடபுள் உப்புமா (avul vegetable uppuma)


 அவுல்  வெஜிடபுள்  உப்புமா


         தேவையான  பொருட்கள் 

  •   அவுல் -1கப் (கட்டி அவுல் )
  •   தண்ணீர் -3கப் 
  •   உப்பு -தேவையான அளவு 
  •  இஞ்சி -3பீஸ் பொடியாக  நறுக்கியது 
  •   வெங்காயம் -2
  •   குடைமிளகாய் -1/4கப் 
  •   பட்டாணி -1/4கப் 
  •   கேரட் -1/4கப் 
  •   தக்காளி -1

தாளிக்க  தேவையான பொருட்கள் 

  • ஆயில் -2ஸ்பூன் 
  • கடுகு -3/4ஸ்பூன் 
  • உளுத்தம்பருப்பு -1/2ஸ்பூன் 
  • கடலைபருப்பு -1/4ஸ்பூன் 
  • நிலகடலை -1ஸ்பூன் 
  • பச்சை மிளகாய் -3
  • கறிவேப்பிலை -6இதழ்கள் 
  • கொத்தமல்லி தழை -3ஸ்பூன் 

 செய்முறை 

       தண்ணீரில்  அவுளை  25 நிமிடங்கள்  ஊர வைக்கவும். 
  காய்கறிகளை  பொடியாக  நறுக்கவும் 


.
           .கடாயில்  ஆயில்  விட்டு கடுகு ,உளுத்தம்பருப்பு ,கடலைபருப்பு ,நிலகடலை ,பச்சை மிளகாய் ,கறிவேப்பிலை  தாளிக்கவும் .
பிறகு  வெங்காயத்தை  போட்டு  5 நிமிடங்கள்  வதக்கிய  பிறகு  காய்கறிகளை  போட்டு பின்  உப்பு  சேர்த்து   15 நிமிடங்கள்  வதக்கி  10 நிமிடங்கள்  மூடி  வைக்கவும்
.பின்  ஊர  வைத்த  அவுளை வடிகட்டி  கடாயில்  போட்டு  

  5 நிமிடங்கள்  கிளறி  இறக்கி  வைத்து  பரிமாறவும் .

  பின்  குறிப்பு 

     இந்த  அவுல்  உப்புமா  பிரைட்  ரைஸ்  போல்  சுவையாக  இருக்கும்  குழந்தைகளுக்கு  ஏற்ற  உணவு.

      
           

No comments:

Post a Comment