Sunday, 17 February 2013

கடாய் வெஜ் (kadai veg)

 கடாய்  வெஜ்



தேவையான பொருட்கள்

  • பன்னீர் -5-6பீஸ்
  • குடை மிளகாய் -1
  • கேரட் -2
  • காலிப்ளவர் -1கப்
  • வெங்காயம் -2
  • தக்காளி -2
  • பட்டாணி -1/2கப்
  • பேபி கார்ன் -2
  • உருளை கிழங்கு -1கப்
  • மிளகாய் பொடி 1ஸ்பூன் (காஷ்மீர் சில்லி பொடி )
  • சீரகம் பொடி -1/2ஸ்பூன்
  • தனியா பொடி -1ஸ்பூன்
  • மஞ்சள் பொடி -1/2ஸ்பூன்
  • உப்பு -தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்


  • ஆயில் -2கரண்டி (ஆலிவ் ஆயில் )விருபத்திற்கேற்ப
  • சீரகம் -1/2ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது -1/2ஸ்பூன்
  • கிராம்பு -4
  • பட்டை -3/4பீஸ்
  • முந்திரி பருப்பு -7
  • ஏலக்காய் -3
  • BRINJI இழை -1

செய்முறை

தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்
 .பிறகு தக்காளியை தோல் உரித்து நன்றாக மசித்து கொள்ளவும்
.காய்கறிகளை சதுர வடிவங்களாக நறுக்கி கொள்ளவும்


.அடுப்பில் கடாயை வைத்து ஆயில் விட்டு முதலில் சீரகம் போட்ட பின் கிராம்பு ,பட்டை .முந்திரி ,வரமிளகாய் , BRINJI இழை ,இவை அனைத்தையும் போட்டு 5 நிமிடங்கள் வதக்கிய

 பிறகு குடை மிளகாயை போட்டு 1நிமிடம் வதக்கிய பின் வெங்காயத்தை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்

.பின் இஞ்சி பூண்டு விழுது தக்காளி விழுது ,காய்கறிகளை ஒவொன்றாக போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும் .

பிறகு தனியா பொடி ,சீரகம் பொடி ,மிளகாய் பொடி ,மஞ்சள் பொடி,உப்பு  சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கிய பின் 20-30 நிமிடங்கள் மூடி வைக்கவும் (அடுப்பை சிறியதாக வைத்து மூடவும் )30 நிமிடங்கள் பிறகு இறக்கி வைத்து கொத்தமல்லிதழை தூவி பரிமாறவும் .


பின் குறிப்பு

வெஜ் கடாய் :சப்பாத்தி ,புல்கா ,குல்சா ,இவை அனைத்துக்கும் தொட்டுகொள்ள சுவையாக இருக்கும்

No comments:

Post a Comment