தேவையான பொருட்கள்
கொண்டை கடலை - 1கப் (கருப்பு கடலை)
உப்பு -தேவையான அளவு
வெங்காயம் -2 பெரியது (பொடியாக நறுக்கவும்)
அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் -1/2கப்
சீரகம் -1/2ஸ்பூன்
வற்றல் மிளகாய் -4
தாளிக்க தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் -3ஸ்பூன்
கடுகு -1/2ஸ்பூன்
வற்றல் மிளகாய் -1
கறிவேப்பிலை -5இதழ்கள்
செய்முறை
கடலையை 7-8 மணி நேரம் தண்ணீர் விட்டு ஊர வைக்கவும்.குக்கரில் கடலையை தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து 6-7 விசில் விட்டு எடுக்கவும் .
கடாயில் கடுகு .கறிவேப்பிலை ,வற்றல் மிளகாய் தாளித்து,வெங்காயத்தை வதக்கிய பின் வெந்த கடலையை போடவும்.
பிறகு அரைத்த விழுதையும் சேர்த்து 10நிமிடங்கள் கொதிக்க வைத்து புட்டுடன் பரிமாறவும் .
பின் குறிப்பு : சென்னா கடலை கொண்டும் கடலை கறி செய்யலாம்
No comments:
Post a Comment