Sunday, 4 August 2013

தக்காளி வெங்காயம் காரசட்னி (tomato onion kara chutney)

தக்காளி வெங்காயம் காரசட்னி 















தேவையான பொருட்கள் 

  • தக்காளி -1/2கிலோ 
  • சின்ன  வெங்காயம் -200 கிராம் 
  • வர மிளகாய் -10
  • புளி -நெல்லிக்காய் அளவு 
  • கொத்தமல்லி தழை -1கட்டு 
  • கறிவேப்பிலை -10 இழை 
  • உப்பு -தேவையான அளவு 
  • ஆயில் - 1 டேபிள்  ஸ்பூன் 

தாளிக்க தேவையான  பொருட்கள் 


  • ஆயில் -1/2ஸ்பூன் 
  • கடுகு ,உளுத்தம் பருப்பு -1ஸ்பூன் 
  • பெருங்காய பொடி -1/4 ஸ்பூன் 

செய்முறை 

        கடாயில்  ஆயில்  விட்டு  வரமிளகாய்,வெங்காயம்  சேர்த்து  10 நிமிடங்கள்  வதக்கவும். 

பின்  தக்காளியை  சேர்த்து  போட்டு  வதக்கவும்.தக்காளியில்   தண்ணீர்  வற்றும் வரை வதக்கவும்,
 பிறகு  இறக்கி  வைத்து  நன்றாக  ஆறிய  பிறகு  கொத்தமல்லி  தழை ,கறிவேப்பிலை ,புளி , உப்பு  சேர்த்து  மிக்ஸ்யில்  போட்டு  அரைத்து  எடுக்கவும் .



 பிறகு  தாளிக்க  கொடுத்துள்ளதை  தாளித்து.


  அரைத்த  விழுதை  சேர்த்து  10 நிமிடங்கள்  வதக்கிய  பிறகு  இறக்கி  வைத்து  தோசை , இட்லியுடன்  பரிமாறவும்.



Monday, 15 July 2013

மேத்தி பராத்தா (METHI PARATHA)


மேத்தி பராத்தா  



வெந்தயம்
வெந்தயம் சிறந்த மருத்துவ பயன்களை உடையது. ஆயிரக்கணக்கான வருடங்களாக சமையலிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீரையும் விதையைப் போலவே சமையலுக்கும், மருத்துவத்திற்கும் பயனாகிறது. வெந்தய செடியின் விசேஷம் என்னவென்றால் தான் வளர்ந்த பூமிக்கு திரும்பவும் நைட்ரஜன் உரத்தை காத்து வைக்கும் நன்றியுள்ள தாவரம். ஒன்று (அ) இரண்டடி உயரம் வளரும்

பயன்கள்


அ. உள்ளுக்கு நிறைந்த நார்ச்சத்து இருப்பதாலும், இதில் உள்ள லவணசாரம் என்ற பொருளால் ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க முடியும் என்பதாலும், வெந்தயம் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. 10 (அ) 20 கிராம் வெந்தயத்தை உணவுக்கு 5 (அ) 10 நிமிடங்களுக்கு முன்பு அல்லது உணவுடன் சாப்பிட்டு வர, இரத்த சர்க்கரை அளவு குறையும். டயாபடீஸால் ஏற்படும் ஆண்மை குறைவுக்கு – வறுத்து பொடித்த வெந்தயப் பொடி – 2 டீஸ்பூன், அரை ஸ்பூன் சீரகம், தனியா பொடி – 1 டீஸ்பூன் – சேர்த்து உட்கொள்ளுதல் பயனளிக்கும். வெந்தயத்தை முளை கட்டி உபயோகித்தால் பயன்கள் அதிகம். வெந்தயப் பொடியை 2 டீஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடித்து வருதல் நீரிழிவு நோயாளிக்கு நல்லது.
அசதி, களைப்பு, உடல் வலி, மறைய வெந்தயப் பொடியை எடுத்துக் கொள்ளலாம்.
பசியை தூண்டும், வயிறு உப்புசம், வாய்வுக் கோளாறுகளுக்கு வெந்தயப் பொடி, பெருங்காயம் இரண்டிலும் 1/2 தேக்கரண்டி எடுத்து மோரில் கலக்கி குடிக்கலாம்.
உடல் சூடு, உடல் காங்கை குறைய இரவில் வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை காலையில் குடித்து வரவும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் பிரச்சனைக்கு, மஞ்சள்பொடி கலந்த வெந்தய கஷாயத்தால் கழுவினால் குணமாகும்.
வெந்தய கஷாயம் நரம்புத்தளர்ச்சியை போக்கும்.
தொண்டைப்புண், வாய்ப்புண்களுக்கு வெந்தய இலை விதைகளால் செய்த கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளிக்கலாம். தினம் 2 (அ) 3 முறை செய்யலாம்.
பிரசவித்த தாய்மார்களின் தாய்ப்பால் பெருக உதவும் அரிசியில் உளுந்து கலக்காமல், ஆறுக்கு ஒன்று என்ற அளவில் (அரிசி 6 பாகம், வெந்தயம் 1 பாகம்) வெந்தயம் அல்லது தோசை மாவு செய்து புளிக்க வைத்து அதில் தோசை வார்த்து தாய்மார்களுக்கு கொடுப்பது வழக்கம்.
இரண்டு தேக்கரண்டி வெந்தயம் (அ) சிறுகட்டு வெந்தயக்கீரையை அரிசியுடன் சமைத்து சிறிது உப்பு சேர்த்து உண்டு வர, ரத்த சோகை மறையும். உடலில் இரும்புச்சத்து சேரும்.
தூக்கம் வர வெந்தயகீரை சாற்றுடன் (2 டீஸ்பூன்) ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, தூங்கப்போகும் போது குடிக்கவும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போக – வெந்தயத்தை பொடித்து, சம அளவு வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்து சிறு உண்டைகளாக உருட்டி சாப்பிட்டு வர வேண்டும். இதை மாத விளக்கு ஏற்படும் முந்தைய நாட்களிலிருந்து சாப்பிட்டு வர வேண்டும்.
(ஆ) வெளிப்பூச்சுக்கு
இரவில் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் விழுதாக அரைத்து தலையில் தடவிக் கொள்ளவும். இதை வாரம் 2 (அ) 3 முறை செய்தால் பொடுகு மறையும்.
உடல் வீக்கம் புண்களுக்கு வெந்தய களிம்பை சிறிது சூடாக்கி தடவினால் குறிப்பு: உதிரப்போக்கு உள்ளவர்கள், அதிக உதிரப்போக்கு நோய்கள் உள்ளவர்கள் வெந்தயத்தை தவிர்க்க வேண்டும்
         
வட இந்தியாவில் வெந்திய கீரையால் செய்யும் ரொட்டி, சப்பாத்தி மிகவும் பிரசித்தம். ஆரோக்யமான உணவான வெந்தைய சப்பாத்தி இதோ   


மேத்தி பராத்தா  


தேவையான  பொருட்கள் 
  •   கோதுமை மாவு -3கப் 
  •   மஞ்சள் பொடி -1/4ஸ்பூன் 
  •   சீரகபொடி -1/2ஸ்பூன் 
  •   தனியா பொடி -1/2ஸ்பூன் 
  •   மிளகாய் பொடி -1/2ஸ்பூன் 
  •   வெந்தயகீரை -1கப் 
  •   உப்பு -தேவையான அளவு    
  •   தண்ணீர் -தேவையான அளவு 
  •   நெய் -தேவையான அளவு 
  •  ஆயில் -2ஸ்பூன் 

  செய்முறை 




          வெந்தய கீரையை  பொடியாக  நறுக்கி  கொள்ளவும். பின்  கடாயில்  ஆயில்  விட்டு  காய்ந்த  பின்  மஞ்சள் பொடி ,சீரக பொடி ,மிளகாய் பொடி,தனியா பொடி,நறுக்கிய  கீரை  இவை  அனைத்தையும்  சேர்த்து  10 நிமிடங்கள்  வதக்கி  கொள்ளவும்.பிறகு  ஒரு  பேசனில்  கோதுமை  மாவை  போட்டு  உப்பு ,வதக்கி  வைத்துள்ள  கீரை  மசாலா,தண்ணீர்  சேர்த்து  பிசைந்து  கொள்ளவும்.பிறகு சிறிய  உருண்டைகளாக்கி  சப்பாத்திகளாக  இடவும்.பின்  சப்பாத்தி  கல்லில்  இருபுறமும்  போட்டு  எடுத்து  நெய்  தடவி  பரிமாறவும்.

பின்  குறிப்பு 
          இதற்கு  தொட்டு கொள்ள ஆனியன் ரெய்தா   சுவையாக  இருக்கும் .
           தேவையானால்  கரம் மசாலா  சேர்த்து கொள்ளவும் .
        
         
        
           
             

Saturday, 11 May 2013

தஞ்சாவூர் ஸ்வீட் மாங்காய் பச்சடி ( thanjavur mango sweet pachadi)



 தஞ்சாவூர்  ஸ்வீட் மாங்காய்  பச்சடி 


           தேவையான  பொருட்கள் 

  • மாங்காய் -1(மூக்கு மாங்காய் )
  • வெல்லம் -1/2கப் ( பொடித்த பாகு வெல்லம் )
  • மஞ்சள் பொடி  -1/2 ஸ்பூன் 
  • உப்பு - கொஞ்சம் 
  • தண்ணீர் -1கப் 
  •             
  •                   

தாளிக்க  தேவையான பொருட்கள் 

  •  ஆயில் -1ஸ்பூன் 
  •  கடுகு -1/2ஸ்பூன் 
  •  பச்சை மிளகாய் -2

செய்முறை 

              மாங்காவை  தோல்  உரித்து  நறுக்கி  கொள்ளவும்.
 பின் குக்கரில்  வைத்து மஞ்சள்  பொடி சேர்த்து   4-5 விசில்  விட்டு  இறக்கவும்.பிறகு வெந்த  மாங்காயை  மசித்து  வைத்து  கொள்ளவும். பின்   கடாயை  அடுப்பில்  வைத்து   தண்ணீர்  விட்டு  கொதித்தவுடன்  வெள்ளத்தை  போடவும்
.வெள்ளம்  கரைந்தவுடன்  வடிகட்டி  கடாயை  அடுப்பில்  வைத்து  வெல்ல  கரைசலை  விட்டு  2 நிமிடங்கள்  கொதித்தவுடன்  மசித்து  வைத்துள்ள  மாங்காயை  சேர்க்கவும்

.பின் உப்பு  சிறிது சேர்த்து  நன்றாக  5 நிமிடங்கள்  கிளறி  இறக்கி  வைக்கவும். தேவையானால்  தண்ணீர்  சேர்த்து  கொள்ளவும். பிறகு  தாளிக்க  கொட்டி  பரிமாறவும்

.

பின் குறிப்பு 

இனிப்பு  அதிகம்   தேவையானால்  வெல்லம் அதிகமாக   சேர்த்து  கொள்ளவும்.

Wednesday, 24 April 2013

பனாரசி ஆலூ சப்ஜி (Banarazi Aloo Sabzi)

பனாரசி ஆலூ சப்ஜி 





               தேவையான  பொருட்கள் 


  • சின்ன உருளை கிழங்கு -20
  • மஞ்சள் பொடி -1/2ஸ்பூன் 
  • கரம் மசாலா பொடி -1/2ஸ்பூன் 
  • மிளகாய் பொடி -1/4ஸ்பூன் 
  • உப்பு -தேவையான அளவு 
  • சக்கரை -1/2ஸ்பூன் 
  • மில்க் கிரீம் -2ஸ்பூன் (தேவையானால் )
  • கஸ்துரி மேத்தி இழை -1/2ஸ்பூன் 
  • நெய் -2ஸ்பூன் 
  • ஆயில்- 2ஸ்பூன் 

அரைக்க தேவையான பொருட்கள் 


  • வெங்காயம் -2(பெரியது )
  • முந்திரி -6
  • பச்சை மிளகாய் -1
  • வர மிளகாய் -2
  • மிளகு -5
  • சீரகம் -1/4ஸ்பூன் 
  • சோம்பு -1/4ஸ்பூன் 
  • பூண்டு -4
  • இஞ்சி -ஒரு சிறிய துண்டு  


செய்முறை 

                  தக்காளியை  கொதிக்கும்  தண்ணீரில்  20 நிமிடங்கள்  போட்டு  மூடி  வைக்கவும்.பின்  தக்காளியை  மிக்ஸ்யில்  போட்டு  அரைத்து  கொள்ளவும் .





                 உருளை கிழங்கை  குக்கரில்  வேக வைத்து  தோல் உரித்து கொள்ளவும். 
அரைக்க  கொடுத்துள்ள  பொருட்களை  மிக்ஸ்யில்  அரைத்து  கொள்ளவும். 

அடுப்பில்  கடாயை  வைத்து ஆயில்  விட்டு வேக  வைத்துள்ள  உருலைகிழங்கை போட்டு  10 நிமிடங்கள்  வதக்கி  கொள்ளவும்.

 பின் அதை  தனியாக  ஒரு  தட்டில்  வைக்கவும்.அதே  கடாயில் நெய்  விட்டு அரைத்த  விழுதை  போட்டு  5 நிமிடங்கள்  வதக்கிய  பிறகு  அரைத்த  தக்காளி  விழுதை  சேர்த்து  மேலும்  15 நிமிடங்கள்  வதக்கி  கொள்ளவும்.


 தேவையானால்  தண்ணீர்  1/2 கப்  சேர்த்து  கொதிக்க  வைக்கவும்.பிறகு  மஞ்சள்  பொடி,மிளகாய் பொடி,சக்கரை ,உப்பு ,கரம் மசாலா பொடி, சேர்த்து  15 நிமிடங்கள்  கொதித்த  பின் 

 வதக்கி  வைத்துள்ள  உருளையை  சேர்த்து  கஸ்துரி  மேத்தி  இழை  சேர்த்து  கொத்தமல்லி தழை  தூவி  இறக்கி  வைத்து  மில்க் க்ரீமை  விட்டு  பரிமாறவும்.



பின்  குறிப்பி 

1.ஆலு  க்ரேவி - புல்கா ,சப்பாத்தி ,புலாவ்  இவை  அனைத்துக்கும்  தொட்டு  கொள்ளலாம்.
       



Tuesday, 23 April 2013

கார்ன் புலாவ் ( CORN PULAO)

கார்ன்  புலாவ்   



                    

தேவையான பொருட்கள் 


  • பாஸ்மதி ரைஸ் -2கப் 
  • frozen corn-1கப் 
  • தேங்காய் பால் -1/2கப் 
  • தண்ணீர் -2கப் 
  • இஞ்சி பூண்டு விழுது -1/2ஸ்பூன் 

 அரைக்க  தேவையான  பொருட்கள் 


  • பூண்டு -5
  • மிளகு -7
  • பட்டை -1/2பீஸ் 
  • முந்திரி -5
  •  பச்சை மிளகாய் -3

தாளிக்க  தேவையான பொருட்கள் 


  •   ஆயில்,நெய் -3ஸ்பூன் 
  •   பட்டை இழை -1/2
   

செய்முறை 

      அரைக்க  கொடுத்துள்ளதை  மிக்ஸ்யில்  அரைத்து  கொள்ளவும்.
அரிசியை  20 நிமிடங்கள்  ஊறவைத்து  கொள்ளவும்.
கடாய் அல்லது  குக்கரில்  ஆயில்  விட்டு  தாளித்து  கொட்டவும்
.பின்  அரைத்த  விழுது,இஞ்சி  பூண்டு  விழுது,சேர்த்து  5 நிமிடங்கள்  வதக்கி  கொள்ளவும்

. பிறகு  கார்ன் சேர்த்து  மேலும்  5 நிமிடங்கள்  வதக்கிய  பின் ஊர  வைத்துள்ள  அரிசியை  சேர்த்து  2 நிமிடங்கள்  வதக்கவும்

.பின்   தேங்காய் பால்,தண்ணீர் ,உப்பு  சேர்த்து  2 நிமிடங்கள்  கொதித்த  பிறகு  25 நிமிடங்கள்  மூடி  வைக்கவும்





.பின்  கொத்தமல்லி  தழை  தூவி  பரிமாறவும்.

Saturday, 6 April 2013

நெல்லிக்காய் தொக்கு ( GOOSEBERRY THOKKU)


நெல்லிக்காய்  தொக்கு 


            தேவையான பொருட்கள் 

  • நெல்லிக்காய் -7
  • வரமிளகாய் பொடி -4ஸ்பூன் 9விருப்பத்திற்கேற்ப )
  • பெருங்காய பொடி -1ஸ்பூன் 
  • உப்பு -தேவையான அளவு 
  • கறிவேப்பிலை -7
  • நல்லெண்ணெய் -3கரண்டி 
  • வெந்தயம் -2ஸ்பூன் 
  • மஞ்சள் பொடி -1/2ஸ்பூன் 
  • கடுகு -1/2ஸ்பூன் 
  • சக்கரை -1/3ஸ்பூன் 

 செய்முறை 

          பாத்திரத்தில் 2 கப்  தண்ணீர்  விட்டு  அடுப்பில்  வைத்து  கொதிக்க விடவும்.
பின்  கொதிக்கும்  தண்ணீரில்,உப்பு ,  நெல்லிக்காயை  போட்டு  40 நிமிடங்கள்  மூடி  வைக்கவும்
.பிறகு  கடாயில்  1ஸ்பூன்  வெந்தயத்தை  போட்டு  சிவக்க  வறுத்து  மிக்ஸ்யில்  பொடி  செய்து  கொள்ளவும்
. ஊறிய  நெல்லிக்காயை  கொட்டை  எடுத்து  மிக்ஸ்யில்  போட்டு  கரகரப்பாக  அரைத்து  கொள்ளவும்
.பிறகு  கடாயில்  எண்ணெய்  விட்டு  கடுகு,கறிவேப்பிலை  மஞ்சள் பொடி,
பெருங்காய பொடி  சேர்த்து 



 அரைத்து  வைத்துள்ள  நெல்லிக்காய்  விழுதை  சேர்த்து 
 5 நிமிடங்கள்  கிளறவும்.பின்  வரமிளகாய் பொடி,சக்கரை,வெந்தய பொடி    போட்டு  மேலும்  20 நிமிடங்கள்  வதக்கி  இறக்கி  வைக்கவும்.

 நன்றாக  ஆறிய  பின்  ஒரு  பாட்டிலில்  போட்டு  வைத்து  கொள்ளவும் 

  பின்  குறிப்பு 

    நெல்லிக்காய்  தொக்கு -கை படாமல்  வைத்து  கொள்ளவும்.
    தண்ணீர்  சேர்க்க  வேண்டாம்.