நெல்லிக்காய் தொக்கு
தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய் -7
- வரமிளகாய் பொடி -4ஸ்பூன் 9விருப்பத்திற்கேற்ப )
- பெருங்காய பொடி -1ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- கறிவேப்பிலை -7
- நல்லெண்ணெய் -3கரண்டி
- வெந்தயம் -2ஸ்பூன்
- மஞ்சள் பொடி -1/2ஸ்பூன்
- கடுகு -1/2ஸ்பூன்
- சக்கரை -1/3ஸ்பூன்
செய்முறை
பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
பின் கொதிக்கும் தண்ணீரில்,உப்பு , நெல்லிக்காயை போட்டு 40 நிமிடங்கள் மூடி வைக்கவும்
.பிறகு கடாயில் 1ஸ்பூன் வெந்தயத்தை போட்டு சிவக்க வறுத்து மிக்ஸ்யில் பொடி செய்து கொள்ளவும்
. ஊறிய நெல்லிக்காயை கொட்டை எடுத்து மிக்ஸ்யில் போட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும்
.பிறகு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை மஞ்சள் பொடி,
பெருங்காய பொடி சேர்த்து
அரைத்து வைத்துள்ள நெல்லிக்காய் விழுதை சேர்த்து
5 நிமிடங்கள் கிளறவும்.பின் வரமிளகாய் பொடி,சக்கரை,வெந்தய பொடி போட்டு மேலும் 20 நிமிடங்கள் வதக்கி இறக்கி வைக்கவும்.
நன்றாக ஆறிய பின் ஒரு பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும்
பின் குறிப்பு
நெல்லிக்காய் தொக்கு -கை படாமல் வைத்து கொள்ளவும்.
தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
No comments:
Post a Comment